ஹாலிவுட் பட பாணியில் நேருக்கு நேர் மோதிய இருசக்கர வாகனங்கள்.. தூக்கி வீசப்பட்ட 4 பேர் ரத்த வெள்ளத்தில் பலி..!

By vinoth kumar  |  First Published May 29, 2023, 1:08 PM IST

கொல்லப்பட்டி அருகே வந்துக்கொண்டிருந்த போது இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட 4 பேரும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தனர். 


ஒட்டன்சத்திரம் அருகே இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு மோதிக்கொண்டது. இந்த விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே  உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அடுத்த சீத்தப்பட்டியை சேர்ந்த ரத்தினம், அவரது நண்பர் சேகர் ஆகியோர் இருசக்கர வாகனத்தில் பழனி முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்துவிட்டு ஊர் திரும்பிக்கொண்டிருந்தனர். அதேபோல் ரெட்டியார் சத்திரம் பகுதியை சேர்ந்த சுதாகர் மற்றும் துரைராஜ் ஆகியோர் வேடசந்தூரில் இருந்து இருசக்கர வாகனத்தில் வந்துள்ளனர். 

Latest Videos

undefined

இதையும் படிங்க;- துப்பட்டா போடாத பெண்களைப் பார்த்தாலே இப்படி செய்யணும் போல தோணுது! இதுவரை 100 பேர்! சென்னை இளைஞர் பகீர்.!

அப்போது, எதிர்பாராத விதமாக கொல்லப்பட்டி அருகே வந்துக்கொண்டிருந்த போது இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட 4 பேரும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தனர். 

இதையும் படிங்க;-  50 வயதுடைய நபருடன் 28 வயது பெண் கள்ளக்காதல்.. இடையில் வந்த 55 வயது வைத்தி.. இறுதியில் நடந்த ட்விஸ்ட்..!

இந்நிலையில் விபத்தை கண்ட லாரி டிரைவர் தனது லாரியினை அங்கே நிறுத்தியுள்ளார். நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது பின்னால் வந்த இருசக்கர வாகனம் மோதியதில் பிரவீன்குமார் என்ற இளைஞர் காயமடைந்தார். இந்த விபத்து தொடர்பாக தகவல் அறிந்துது சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் 4 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கோர விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

click me!