ஒரே நாளில் இத்தனை ஆயிரம் பத்திர பதிவா.?பல கோடி ரூபாய் வசூலித்து அசத்திய பத்திர பதிவு துறை- அடுத்த இலக்கு என்ன?

By Ajmal Khan  |  First Published Feb 6, 2024, 9:45 AM IST

தமிழ்நாடு அரசின் வருவாய் ஈட்டும் துறைகளில் முக்கிய துறையாக விளங்கிவரும் பதிவுத்துறையில் கடந்த வருடம் 2023 ஜனவரி வரை அடைந்த வருவாயை விட 2024 ஜனவரி முடியவுள்ள காலத்தில் கூடுதலாக ரூ.952.86/- கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக பத்திர பதிவுத்துறை தெரிவித்துள்ளது. 


பத்திர பதிவு துறை சாதனை

பத்திரப்பதிவு மூலம் வருவாயை அதிகரிக்க பல்வேறு திட்டங்களை தமிழக அரசின் பத்திர பதிவுத்துறை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், சுபமுகூர்த்த தினங்களில் சார்பதிவாளர் அலுவலகத்தில் கூடுதல் டோக்கன்கள் விநியோகிக்கப்பட்டு பத்திர பதிவு செய்யப்பட்டு வருகிறது. மேலும் விடுமுறை நாட்களிலும் பத்திர பதிவுக்கான ஏற்பாடுகள் செய்யப்படுகிறது. இதனால் கூடுதல் வருவாய் பத்திர பதிவிற்கு கிடைத்துள்ளது.

Latest Videos

இந்தநிலையில் தான் பதிவுத்துறை சார்பதிவாளர் அலுவலகங்களில் கடந்த மாதம் 24 ஆம் தேதி 2 மட்டும் 26,000 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டு 217 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இது பதிவுத்துறை வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவிலான வசூல் சாதனையாகும் என வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் ஜோதி நிர்மலாசாமி தெரிவித்திருந்தார். 

இந்தி திணிப்பு எந்த ரூபத்தில் வந்தாலும் எதிர்ப்போம்.. இதனை இந்தி வியாபாரி அண்ணாமலை புரிந்துக்கொள்ளனும்- அதிமுக

ஆன்லைனில் பத்திர பதிவுத்துறை

ஒவ்வொரு வருடமும் வருவாய் இலக்கு நிர்ணயித்து, பத்திரப்பதிவு துறை செயல்பட்டு வருகிறது. அந்த வகையில், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில் சென்னை நந்தனம் ஒருங்கிணைந்த வணிகவரி மற்றும் பதிவுத்துறை வளாகக்கூட்டரங்கத்தில் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கான அனைத்து துணைப்பதிவுத்துறை தலைவர்கள், மாவட்டப்பதிவாளர்கள்  மாவட்ட வருவாய் அலுவலர் / தனித்துணை ஆட்சியர்  மற்றும் உதவி செயற்பொறியாளர் ஆகியோரின் பணிச்சீராய்வு கூட்டம் நடைபெற்றது.

கூடுதல் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது

தமிழ்நாடு அரசின் வருவாய் ஈட்டும் துறைகளில் முக்கிய துறையாக விளங்கிவரும் பதிவுத்துறையில் கடந்த வருடம் 2023 ஜனவரி வரை அடைந்த வருவாயை விட 2024 ஜனவரி முடியவுள்ள காலத்தில் கூடுதலாக ரூ.952.86/- கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து  ஆய்வுக்கூட்டத்தில் பேசிய  அமைச்சர் மூர்த்தி, துணைப்பதிவுத்துறை தலைவர்கள் அனைவரும் பதிவுத்துறைக்கு அரசு நிர்ணயித்த வருவாய் இலக்கினை அடையும் பொருட்டு தத்தம் மண்டலத்தில் பணிபுரியும் சார்பதிவாளர் அலுவலகம் வாரியாக சீராய்வு மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.

வருவாயினை பெருக்க அறிவுரை

 இந்திய முத்திரைச்சட்டப்பிரிவு 47A-ன் கீழ் விரைவில் இறுதியாணை பிறப்பித்து இழப்பினை வசூலிக்கவும், தணிக்கை இழப்பு மற்றும் வருவாய் வசூல் சட்டத்தின் கீழ் வசூலிக்கப்பட வேண்டிய தொகைகளை தொய்வின்றி வசூலித்து அரசிற்கு வரவேண்டிய வருவாயினை பெருக்க அறிவுரைகள் வழங்கினார். மேலும், பதிவுக்கு வரும் பொது மக்களின் பணிகளை செவ்வனே செய்து புகாருக்கு இடமின்றி அனைத்து அலுவலர்களும்,  பணியாளர்களும் பணி புரிந்து, அரசு நிர்ணயித்த வருவாய் இலக்கினை அடைந்திட வேண்டும் என கு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் அவர்கள் அறிவுறுத்தியுள்ளார். 

இதையும் படியுங்கள்

ஏழை மாணவர்களின் கல்விக்காக ரூ.20,000 கோடி நிதியுதவி வழங்கிய மாமனிதர்.. அவரின் சொத்து மதிப்பு எவ்வளவு?

click me!