சென்னை போலீஸ் அதிரடி ரைடு !! நேற்று ஒரே நாளில் அடிதடி வழக்கில் 92 குற்றவாளிகள் கைது..

Published : Oct 28, 2022, 06:06 PM IST
சென்னை போலீஸ் அதிரடி ரைடு !!  நேற்று ஒரே நாளில் அடிதடி வழக்கில் 92 குற்றவாளிகள் கைது..

சுருக்கம்

சென்னை முழுவதும் நேற்று போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், அடிதடி உள்ளிட்ட வழக்குகளில் சம்பந்தப்பட்ட 93 தலைமறைவு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  

சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் சென்னையில் கடந்த 3 மாதங்களில் பதிவான அடிதடி, கொடுங்காயம் உள்ளிட்ட வழக்குகளில் தொடர்புடைய தலைமறைவு குற்றவாளிகளை பிடிக்க ஒரு நாள் சிறப்பு தணிக்கை மேற்கொள்ளப்பட்டது.

மேலும் படிக்க:புதுச்சேரியில் உடனடியாக என்.ஐ.ஏ அலுவலகம் வேண்டும்.. பரபரப்பை கிளப்பிய அதிமுக..

அதன் படி, காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் அக்.25 ஆம் தேதி வரை, சென்னை பெருநகரில் பதிவான அடிதடி மற்றும் கொடுங்காயங்கள் ஏற்படுத்தியது தொடர்பான வழக்குகளில் சம்பந்தப்பட்ட தலைமறைவு குற்றவாளிகளை பிடிக்க நேற்று (27ம் தேதி ) ஒரு நாள் அதிரடி சிறப்பு தணிக்கை நடத்தப்பட்டது.

மேலும் படிக்க:வாகன விதிமுறைகள் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும்... அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் மதுரைக்கிள் அறிவுறுத்தல்!

இச்சோதனையில் இதுதொடர்பான வழக்கில் இதுவரை பதிவான 369 வழக்குகளில் ஏற்கெனவே 604 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அதனடிபடையில் ஒரு நாள் சிறப்பு சோதனையில், மேற்படி 369 வழக்குகளில் தொடர்புடைய 93 தலைமறைவு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

டிசம்பர் மாதத்தில் மழை எப்படி இருக்கும்? அடுத்தடுத்து உருவாகும் புயல்? டெல்டா வெதர்மேன் முக்கிய தகவல்
விஜய் வீட்டில் ராகுலில் முகமூடி பிரவீன்..! திமுகவை வெறுப்பேற்றும் காங்கிரஸ்..! தவெகவை வைத்து ஆடுபுலி ஆட்டம்..!