வாகன விதிமுறைகள் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும்... அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் மதுரைக்கிள் அறிவுறுத்தல்!

By Narendran S  |  First Published Oct 28, 2022, 5:35 PM IST

தமிழகத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் ஒரே மாதிரியான வாகன விதிமுறைகள் இருக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அறிவுறுத்தியுள்ளது. 


தமிழகத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் ஒரே மாதிரியான வாகன விதிமுறைகள் இருக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அறிவுறுத்தியுள்ளது. நாகர்கோயிலை சேர்ந்த சுயம்புலிங்கம் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், தமிழகத்தில் அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. 2012 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசா கல்வி நிறுவன வாகன விதிகள் சட்டம் அமல்படுத்தப்பட்டது. அதன்படி அரசு மற்றும் தனியார் பள்ளிகள் தங்கள் வாகனங்களை முறையாக பராமரிக்க வேண்டும். பள்ளி வாகனங்களை மஞ்சள் நிறத்தில் இருக்க வேண்டும். வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்பட்டிருக்க வேண்டும் என பல்வேறு விதிகள் உள்ளது.

இதையும் படிங்க: கோவையில் முழு அடைப்பு! நாங்கள் சொல்லவே இல்லை!..நீதிமன்றத்தில் பல்டி அடித்த அண்ணாமலை

Tap to resize

Latest Videos

ஆனாலும், கல்வி வாகனங்களில் அதிகளவில் மாணவர்களை ஏற்றுவது, வாகனங்களை முறையாக பராமரிக்காமல் இருப்பது, வாகனங்களில் பள்ளியின் பெயர் குறிப்பிடாமல் இருப்பது, மாணவர்களை கண்காணிக்க  போதிய நடத்துனர் இல்லாமல் இருப்பது போன்ற பல்வேறு நடவடிக்கைகளில் கல்வி நிறுவனங்கள் ஈடுபடுகின்றனர். இதுகுறித்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு அதில்  பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டது. ஆனால்  தற்போது வரை  தனியார் பள்ளிகளில் முறையாக வாகனங்களை பராமரிக்காமல் இருப்பது போன்ற நடைமுறைகள் தற்போதும் இருந்து வருகிறது. எனவே, பள்ளி நிறுவன வாகனங்கள் விதிகளை முறையாக பின்பற்றவும் உயர்நீதிமன்ற உத்தரவை முறையாக அமல்படுத்தவும் உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையும் படிங்க: 4 நாட்களுக்கு பிறகு என்ஐஏயிடம் வழக்கை ஒப்படைத்தது ஏன்.! காவல்துறை கைகள் கட்டப்பட்டுள்ளதா..? ஆளுநர் ஆர்.என்.ரவி

இந்த மனு நீதிபதிகள் மகாதேவன் சத்தியநாராயண பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளி ஆகியவற்றில் ஒரே மாதிரியான வாகன விதிமுறைகள் இருக்க வேண்டும். குழந்தைகளை பள்ளிக்கு ஆட்டோக்கள் மற்றும் ரிக்சாக்கள் மூலம் எவ்வாறு அனுப்புகின்றனர் இதனை பள்ளிகள் எவ்வாறு ஏற்கின்றனர். இதுபோன்ற செயல்களை நீதிமன்றம் ஏற்காது. பள்ளி வாகனங்களுக்கு என பல்வேறு விதிமுறைகள் உள்ளது. ஆனால் ஆட்டோ, ரிக்சாக்கள் மூலம் வரும் வாகனங்களுக்கு என்ன விதிமுறை உள்ளது. இது மிக முக்கிய பிரச்சனையா உள்ளது. வழக்கு குறித்த பள்ளிக்கல்வித்துறை சார்பில் தகவல் பெற்று தெரிவிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 3 வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.

click me!