91 சதவீத தனியார் பள்ளிகள் வழக்கம் போல இன்று இயங்கின.. போராட்டம் வாபஸ்.

By Ezhilarasan BabuFirst Published Jul 18, 2022, 5:16 PM IST
Highlights

தமிழகத்தில் இன்று 91 சதவீத தனியார் பள்ளிகள் வழக்கம் போல இயங்கியது என மெட்ரிகுலேசன் இயக்குனரகம் தெரிவித்துள்ளது. கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியின் மீது நடந்த தாக்குதலை கண்டித்து மாநிலம் முழுவதும் தனியார் பள்ளிகள் இயங்காது என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மெட்ரிகுலேசன் இயக்குனரகம் இத்தகவலை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் இன்று 91 சதவீத தனியார் பள்ளிகள் வழக்கம் போல இயங்கியது என மெட்ரிகுலேசன் இயக்குனரகம் தெரிவித்துள்ளது. கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியின் மீது நடந்த தாக்குதலை கண்டித்து மாநிலம் முழுவதும் தனியார் பள்ளிகள் இயங்காது என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மெட்ரிகுலேசன் இயக்குனரகம் இத்தகவலை தெரிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் மொத்தம் 11 ஆயிரத்து 335 தனியார் பள்ளிகள் இயங்கி வருகின்றன, அதில் தனியார் பள்ளிகள் வேலைநிறுத்த அறிவிப்பு காரணமாக 987 பள்ளிகள் மட்டுமே இன்று இயங்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

கள்ளக்குறிச்சி கனியாமூர் தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், அப்பள்ளி சூறையாடப்பட்டது ஆயிரக்கணக்கானோரை பள்ளிக்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டனர். இதை கண்டித்து தமிழகம் முழுவதும் தனியார் பள்ளிகள் இயங்காது என தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் சங்க தலைவர் நந்தகுமார் நேற்று அறிவித்து இருந்தார். 

அவரின் இந்த அறிவிப்பை அடுத்து தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில் அரசின் அனுமதி பெறாமல் தனியார் பள்ளிகள் விடுமுறை வழங்குவது கண்டிக்கத்தக்கது என்றும், பள்ளிக்கள் மூடும் பட்சத்தில் அப்பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக அரசு எச்சரித்திருந்தது.  

ஆனால் இன்று பெரும்பாலான தனியார் பள்ளிகள் இயங்கின என தமிழ்நாடு மெட்ரிகுலேசன் இயக்குனரகம் தெரிவித்துள்ளது. மேலும் இன்று இயங்கிய பள்ளிகளில் பட்டியலையும் மெட்ரிகுலேசன் இயக்குனரகம் வெளியிட்டுள்ளது. 

அதன் விவரம் பின் வருமாறு:- தமிழகத்தில்  91% தனியார் பள்ளிகள் இன்று வழக்கம் போல இயங்கிற்று, தமிழகம் முழுவதும் உள்ள 32 மாவட்டங்களில் 11 மாவட்டங்களில் 100 சதவீத தனியார் பள்ளிகள் இன்று இயங்கியது, திருவண்ணாமலை, விழுப்புரம், காஞ்சிபுரம், திருநெல்வேலியை, தஞ்சாவூர்,  சிவகங்கை, விருதுநகர்,  ராமநாதபுரம்,  நாகப்பட்டினம், தூத்துக்குடி, தென்காசி ஆகிய 11 மாவட்டங்களில் தனியார் பள்ளிகள் முழுமையாக இங்கின.

குறைந்தபட்சமாக தருமபுரி மாவட்டத்தில் 190 பள்ளிகளில் 37 பள்ளிகள் மட்டுமே இயங்கியது, அதேபோல் நாமக்கல் மாவட்டத்தில் 216 பள்ளிகளில் 70 பள்ளிகள் மட்டுமே இயங்கின கலவரம் நடைபெற்ற கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மொத்தம் 167 பள்ளிகளில் 153 பள்ளிகள் வழக்கம்போல இயங்கியது. சென்னையில் 689 பள்ளிகளில் 684 பள்ளிகள் என்று வழக்கம் போல இயங்கியது. இது மொத்தம் உள்ள பள்ளிகளில் 91% ஆகும். 

தமிழகத்தில் உள்ள மொத்தம் மெட்ரிகுலேஷன் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி சிபிஎஸ்சி என மொத்தம் 11,335 தனியார் பள்ளிகள் உள்ள நிலையில் இன்று 10348 பள்ளிகள் இயங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. இதே நேரத்தில் தனியார் பள்ளிகள் கூட்டமைப்புடன் இன்று பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையின் அடிப்படையில் நாளை முதல் பள்ளிகள் வழக்கம் போல நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

click me!