பட்டப்பகலில் மர்ம நபர்கள் கைவரிசை; 9 சவரன் நகையை ஆட்டையைப் போட்ட கொள்ளையர்களுக்கு வலைவீச்சு...

By Suresh Arulmozhivarman  |  First Published Aug 23, 2018, 8:36 AM IST

சேலத்தில் பட்டப்பகலில் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் 9 சவரன் நகையைத் திருடிக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர். மர்ம நபர்களை காவலாளர்கள் தீவிரமாகத் தேடி வருகின்றனர். 
 


சேலம்

சேலத்தில் பட்டப்பகலில் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் 9 சவரன் நகையைத் திருடிக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர். மர்ம நபர்களை காவலாளர்கள் தீவிரமாகத் தேடி வருகின்றனர். 

Tap to resize

Latest Videos

undefined

சேலம் மாவட்டம், நரசோதிப்பட்டி, கே.எஸ்.வி. நகரில் வசிப்பவர் மனோகரன். இவர் அழகாபுரம் என்னும் இடத்தில் நகலகம் கடை ஒன்றை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் மனோகரன் தனது மனைவியை அழைத்துக் கொண்டு தனது கடைக்குச் சென்றார். பின்னர், அங்கிருந்து மதிய உணவுக்காக இருவரும் வீட்டுக்குத் திரும்பினர்.

அப்போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிரச்சி அடைந்த இருவரும் உள்ளேச் சென்றனர். அங்கு பீரோவும் உடைக்கப்பட்டு அதிலிருந்த பொருட்கள் அனைத்தும் கீழே சிதறிக் கிடந்தன. பின்னர், பீரோவை ஆராய்ந்ததில் அதில் வைத்திருந்த 9 சவரன் நகை திருடப்பட்டிருந்தது. 

நகை திருடுப் போய்விட்டதே என்று கதறிய கணவன், மனைவி இருவரும் கொள்ளை குறித்து காவல்துறைக்குத் தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சூரமங்கலம் காவலாளர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். வீட்டில் மர்ம நபர்கள் எதாவது தடயத்தை விட்டுச் சென்றுள்ளனரா என்று ஆய்வு நடத்தினர்.

பின்னர், மனோகரனிடம் காவலாளர்கள் விசாரணை நடத்தினர். அதில், "வீட்டில் யாரும் இல்லாததை தெரிந்துகொண்ட மர்ம நபர்கள்தான் திருடி இருப்பார்கள்" என்று காவலாளர்கள் சந்தேகித்தனர். 

கொள்ளையர்கள் நோட்டமிட்டுதான் திருட்டில் ஈடுபட்டிருப்பர் என்று சந்தேகித்ததால் திருடியவர்கள் இதே ஊரைச் சேர்ந்தவர்களா? என்ற கோணத்தில் விசாரணைத் தொடங்கப்பட்டுள்ளது.

பட்டப்பகலில் வீட்டின் கதவை உடைத்து மர்ம நபர்கள் நகையைத் திருடிச் சென்றுள்ளனர் என்ற தகவல் அப்பகுதியில் பரவியதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

click me!