ஆந்திரா அருகே சுற்றாலாப் பேருந்து மீது லாரி மோதி 8 பேர் பலி; 15 பேர் படுகாயம்

Published : Feb 10, 2024, 07:27 AM ISTUpdated : Feb 10, 2024, 09:00 AM IST
ஆந்திரா அருகே சுற்றாலாப் பேருந்து மீது லாரி மோதி 8 பேர் பலி; 15 பேர் படுகாயம்

சுருக்கம்

இந்த விபத்தில் 8 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். படுகாயம் அடைந்த 18 பேர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே சுற்றுலாப் பேருந்து மீது லாரி மோதி விபத்துக்குள்ளானதில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 15 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

சென்னை வடபழனியில் இருந்து ஹைதராபாத் நோக்கி சென்றுகொண்டிருந்த சுற்றுலாப் பேருந்து மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது. சனிக்கிழமை அதிகாலை நெல்லூர் அருகே உள்ள காவலி பகுதியில் இந்த விபத்து நடந்துள்ளது.

இந்த விபத்தில் 8 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். படுகாயம் அடைந்த 18 பேர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

லாரி ஓட்டுநர் மற்றொரு லாரி மீது மோதாமல் இருப்பதற்காக விலகிச் செல்ல முயன்றபோது எதிரே வந்த சுற்றுலாப் பேருந்து மீது லாரி மோதி விபத்து ஏற்பட்டதாக முதல்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

சென்னை, நெல்லை உள்பட 8 மாவட்டங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தேர்தல் நேரத்தில் மடிக்கணினி..? முதல்வர் ஸ்டாலினுக்கு எதிராக கேள்விகளை அடுக்கிய நயினார்..!
பிஆர் பாண்டியனுக்கு 13 ஆண்டுகள் சிறை..! ONGC சொத்துகள் சேதம்.. விவசாய சங்க தலைவருக்கு நீதிமன்றம் அதிரடி