இங்கே பாருங்க! யாராவது போலி பில் தயாரித்து வணிகம் செய்தால் GST பதிவு முடக்கப்படும்! அமைச்சர் மூர்த்தி வார்னிங்

By vinoth kumarFirst Published Feb 10, 2024, 7:00 AM IST
Highlights

வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில் நேற்று சென்னை, நந்தனம் ஒருங்கிணைந்த வணிகவரி வளாகக் கூட்டரங்கில் 2024-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கான அனைத்து இணை ஆணையர்களின் பணித்திறன் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

அரசுக்கு வருவாய் இழப்பீடு செய்யும் வகையில் போலி பில் தயாரித்து வணிகம் செய்வோரின் ஜிஎஸ்டி பதிவு முடக்கம் செய்யப்படும் என வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி எச்சரிக்கை விடுத்துள்ளார். 

வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில் நேற்று சென்னை, நந்தனம் ஒருங்கிணைந்த வணிகவரி வளாகக் கூட்டரங்கில் 2024-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கான அனைத்து இணை ஆணையர்களின் பணித்திறன் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. அப்போது அதிகாரிகளுக்கு அமைச்சர் மூர்த்தி பல்வேறு முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தும் வகையில் போலி பில் பட்டியல் தயாரித்து வணிகம் செய்வோர்கள் மீது உரிய நடவடுக்கை எடுக்கவும், தொடர்ந்து முறைகேட்டில் ஈடுபடுவோர் கண்காணிக்கப்பட்டு அவர்களின் GST பதிவு முடக்கம் செய்யவும் அமைச்சர் அவர்கள் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.  

மேலும், புதியதாக உருவாக்கப்பட்ட நிர்வாகக் கோட்டங்களின் மூலம் வரிவருவாய் அதிகரிக்க வேண்டும் என்பதை நினைவில் கொண்டு அனைத்து இணை ஆணையர்களும் வரிவருவாயை பெருக்க உரிய முறையில் செயலாற்றவும், அனைத்து நிறுவனங்களிலும் கூடுதல் கவனம் செலுத்தி இணை ஆணையர்கள் உரிய நடவடிக்கை எடுத்து அரசு நிர்ணயித்த வருவாய் இலக்கினை அடையவேண்டும் என அமைச்சர் அவர்கள் அறிவுறுத்தினார்கள்.

click me!