
இன்னும் சில மாதங்களில் 2024ம் ஆண்டுக்கான நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. இதன் காரணமாக பல்வேறு கட்சிகள் பிரச்சாரத்தில் ஈடுபட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
இந்த நிலையில் நேற்று (வியாழக்கிழமை) பாஜக தென் சென்னை மாவட்டம் சார்பில் சென்னை மயிலாப்பூர் தொகுதியில் உள்ள ஆர்.கே மடம் சாலையில் தேர்தல் அலுவலகம் திறக்கப்பட்டது.
கபாலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான இந்த இடத்தில் தென் சென்னை பாராளுமன்ற பொறுப்பாளர் ராஜா தலைமையில் மயிலாப்பூர் தொகுதியின் பாராளுமன்ற அலுவலகம் மூத்த தலைவர்களான கரு.நாகராஜன், கராத்தே தியாகராஜன் ஆகியோர் முன்னிலையில் திறக்கப்பட்டது.
வணிக ரீதியான பயன்பாட்டிற்கு என்று கோயில் இடத்தை வாங்கி அதில் அரசியல் கட்சி அலுவலகம் திறக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்து சமய அறநிலையத்துறையின் சென்னை மாவட்ட இணை ஆணையர் ரேணுகா தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
இதனையடுத்து பாஜக தேர்தல் அலுவலகத்தை பூட்டி சீல் வைத்தனர். திறந்து இரண்டு நாள் கூட ஆகாத நிலையில், தேர்தல் அலுவலகம் மூடப்பட்ட சம்பவம் பாஜகவினரிடையே அதிர்ச்சியை உண்டாக்கி உள்ளது.
குறைந்த விலையில் அயோத்தி செல்ல அருமையான வாய்ப்பு.. ஐஆர்சிடிசி டூர் பேக்கேஜ் விலை இவ்வளவு தானா..