சென்னையில் நிலவும் மோசமான வானிலை… 8 விமானங்கள் ரத்து!! | ChennaiFlood

By Narendran SFirst Published Nov 10, 2021, 5:21 PM IST
Highlights

மோசமான வானிலை காரணமாக சென்னையில் 8 விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக விமான போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது. 

#ChennaiFlood சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய 4 விமானங்கள், சென்னைக்கு வர இருந்த 4 விமானங்கள் என மொத்தம் 8 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கிய நாள் முதல் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. பல இடங்களில் கனமழை பெய்வதால் அங்குள்ள நீர் நிலைகள் அனைத்தும் நிரம்பி வருகின்றன. பல இடங்கலில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சென்னையில் கடந்த 6ஆம் தேதி இரவு தொடங்கிய மழை விடிய விடிய பெய்ததை அடுத்து சாலைகளில் நீர் தேங்கியது. தாழ்வான குடியிருப்புகளுக்குள் வெள்ள நீர் புகுந்தது. இதை அடுத்து மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அதிகாரிகள் வெள்ள நீரை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இருந்த போதிலும் சென்னையில் இன்று அதிகாலை முதல் மீண்டும் கனமழை பெய்து வருவதால்,  தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து வடியாத நிலையில், மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் கடந்த 4 நாட்களாக மிக பலத்த மழை பெய்து வருவதால் இயல்பான அளவை விட 50 சதவீதம் அதிக மழை பெய்துள்ளது.

இதற்கிடையே வங்கக்கடலின் தென்கிழக்கில் காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று  உருவாகி அது வலுபெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இதன் காரணமாக சென்னை உள்பட பல மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. வெள்ள நீரால் சென்னை ஏற்கனவே தத்தளித்து வரும் நிலையில், இன்று பெய்து வரும் கனமழையால் மக்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை கரையைக் கடக்கவுள்ள நிலையில், சென்னை இன்றும் நாளையும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மோசமான வானிலை காரணமாக சென்னையில் 8 விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக விமான போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது. மழை மற்றும் மேகமூட்டத்தால் பார்வை சரியாக தெரியவில்லை என கூறப்படுகிறது. இதன் காரணத்தால் விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய 4 விமானங்களும், சென்னைக்கு வர இருந்த 4 விமானங்களும் என மொத்தம் 8 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

அதாவது மதுரை, திருச்சி, மும்பை, ஷார்ஜா ஆகிய பகுதிகளில் இருந்து வருகை தரும் மற்றும் சென்னையில் இருந்து புறப்படும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதுக்குறித்து தகவல் அளித்த விமான போக்குவரத்துத் துறை, சென்னையிலிருந்து கிளம்பும் 4 விமானங்களும் சென்னைக்கு வரவிருந்த 4 விமானங்களும் ரத்து செய்யப்படுவதாக தெரிவித்துள்ளது. கன மழை தொடர்ந்தால் மேலும் சில விமானங்கள் ரத்து செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக விமான நிலைய வட்டாரங்கள் கூறுகின்றன.  கனமழை காரணமாக சென்னை விமான நிலையத்தின் ஓடுபாதையில் தண்ணீர் தேங்கி உள்ளதால் பல விமானங்கள் கடந்த இரண்டு நாட்களாக தாமதமாக கிளம்பியது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டிற்கு இயக்கப்படும் மாலை நேர விமானங்களை ரத்து செய்வதாக இண்டிகோ, ஏர் அரேபியா நிறுவனங்களும் அறிவித்துள்ளது. 

click me!