
கடலுக்குள் மீன் பிடிக்க சென்ற தமிழக மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
கடந்த 6 ஆம் தேதி ராமேஸ்வரம் மற்றும் தங்கச்சிமடத்தை சேர்ந்த மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் திடீரென துப்பாக்கி சூடு நடத்தினர். அதில் பிரிட்ஜோ என்ற மீனவர் உயிரிழந்தார்.
இதனால் மீனவர்கள் போராட்டத்தில் குதித்தனர். மீனவர்கள் பிரட்சனைக்கு நிரந்த தீர்வு கிடைக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.
இதையடுத்து மத்திய அமைச்சர்கள் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.
இதனால் போராட்டத்தை கைவிட்டு மீனவர்கள் மீண்டும் மீன்பிடிக்க கடலுக்குள் சென்றனர்.
இந்நிலையில், இலங்கை கடற்படை நேற்று 10 தமிழக மீனவர்களை சிறைபிடித்து சென்றனர்.
அதேபோல், இன்றும் நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
கைதான 8 பேரும் காங்கேசன் துறை முகாமுக்கு கொண்டு செல்லபட்டுனர்.