
கன்னியாகுமரி அருகே போதகர் வீட்டில் 70 சவரன் தங்க நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் அவரது மகனை காவல்துறையினர் கைது செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்தை அடுத்த முதலாறு பகுதியை சேர்ந்த சிஎஸ்ஐ சபை போதகர் ஜெயக்குமார். இவரது மனைவி பெர்தாரனி.
கடந்த 16ம்தேதியன்று ஜெயக்குமார் தனது மனைவியுடன் ஆலய பிரார்த்தனைக்கு சென்றுவிட்டு, மதியம் வீட்டுக்கு வந்து பார்த்தபோது பீரோவில் இருந்த 7௦ சவரன் தங்க நகைகள் திருடப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து புகாரின்பேரில், போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த விசாரணையில், ஜெயகுமாரின் மகன் ரிஜோ சாமுவேல் நகை திருடியதை ஒப்புக்கொண்டார்.
இதுகுறித்து போலீசார் கூறும்போது,
நகை விற்ற பணத்தில் விலை உயர்ந்த பைக் மற்றும் வீட்டிற்கு ஏசி வாங்கியதாகவும், மேலும் பைக் ஓட்டி செல்லும்போது சொகுசு காரில் மோதியதில் காரின் உரிமையாளருக்கு 2 லட்சம் நஷ்டஈடு கொடுத்துள்ளார்.
தந்தை போதகர், தாய் ஆசிரியை பணி செய்ததால் தன்னை கண்டிப்புடன் வளர்த்து வந்ததாகவும், ஆனால் தனக்கு ஆடம்பர வாழ்க்கை மீது மோகம் ஏற்பட்டதால் இவ்வாறு நடந்து கொண்டதாகவும் ரிஜோ சாமுவேல் தெரிவித்துள்ளார்.
மேலும், வீட்டிற்குள் மறைத்து வைத்திருந்த மீதி நகையை விசாரணையின் போது போலீசாரிடம் ஒப்படைத்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.