வட மாநில தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்பினால் 7 ஆண்டுகள் சிறை.. டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை..!

Published : Mar 04, 2023, 02:38 PM ISTUpdated : Mar 04, 2023, 02:39 PM IST
வட மாநில தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்பினால் 7 ஆண்டுகள் சிறை.. டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை..!

சுருக்கம்

வதந்தி பரப்பிய 4 பேர் மீது இதுவரை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. எந்த நோக்கதத்ததிற்காக வதந்தி பரப்பினார்கள் என்பது பற்றி விசாரணைக்கு பிறகே தெதரியவரும். அவர்கள் வசிக்கும் பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது

வடமாநில தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்புவோருக்கு அதிகபட்சமாக 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பீகார் உள்ளிட்ட வட மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் தாக்கப்படுவதை போலவும், அவர்களுக்கு தமிழகத்தில் பாதுகாப்பு இல்லை என கூறி சில வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வதந்தி பரவியது. இது தொடர்பாக டிஜிபி சைலேந்திரபாபு தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளிக்கையில்;- வடமாநில தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்பினால் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக பரவும் வீடியோ போலியானது. வதந்தி பரப்பிய 4 பேர் மீது இதுவரை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. எந்த நோக்கதத்ததிற்காக வதந்தி பரப்பினார்கள் என்பது பற்றி விசாரணைக்கு பிறகே தெதரியவரும். அவர்கள் வசிக்கும் பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்றும் டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்தார்.

முன்னதாக தமிழக காவல்துறை தரப்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்;- புலம்பெயர்ந்த வட மாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதாக உண்மைக்கு புறம்பான பொய்பான தகவல் இணையதளத்திலும், சமூக ஊடகங்களிலும் விஷமிகள் சிலரால் பரப்பப்பட்டுள்ளது. அப்படி பொய் செய்தி பரப்பியவர்கள் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.

இது தொடர்பாக திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 153(A), 505(i) (b) கீழ் தெய்னிக் பாஸ்கர் பத்திரிக்கையின் ஆசிரியர் மீது ஒரு வழக்கும், திருப்பூர் மாவட்டம் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் இந்திய தண்டனைச் சட்ட பிரிவுகள் 153(B), 506(ii) (b) மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டபிரிவு 56(D) கீழ் தன்வீர் போஸ்ட் என்ற பத்திரிகையின் உரிமையாளர் முகமது தன்வீர் என்பவர் மீது ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதேபோல, தூத்துக்குடி மாவட்டம் செண்ட்ரல் காவல் நிலையத்தில் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 153, 153(A), 504, 505(1(b), 505(1(c), 505(2) கீழ் | பிரசாந்த் உமராவ் என்பவர் மீது ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமறைவாக உள்ள இவர்களை கைது செய்ய தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனரின் உத்தரவின் பெயரில் தனி அமைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் வாழும் புலம்பெயர்ந்த வட மாநில தொழிலாளர்கள் எவ்வித அச்சமும் இன்றி முழு பாதுகாப்புடன் அமைதியாக வசித்து வருகிறார்கள், அமைதியை சீர்குலைத்து பதட்டத்தை ஏற்படுத்தும் வகையில் பொய் செய்திகளை பரப்புவோர் பற்றிய விவரங்கள் காவல்துறையினரால் சேகரிக்கப்பட்டு வருகிறது அவர்கள் மீது காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்கும் என்பது இதன் மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது என கூறியுள்ளனர். 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

போலீஸ் கையைப் பிடித்து கடித்துக் குதறிய தவெக தொண்டர்.. வைரலாகும் விஜய் ரசிகரின் வெறித்தனம்!
அரசு பள்ளி மாணவர்களுக்கு தரமற்ற இலவச சைக்கிள்.. அண்ணாமலையின் பகீர் குற்றச்சாட்டு!