வேலைக்காரப் பெண்ணை கற்பழித்த முதலாளிக்கு 7 ஆண்டுகள் சிறை - ஐந்து வருட வழக்கில் ஒருவழியாக தீர்ப்பு...

By Suresh ArulmozhivarmanFirst Published Aug 21, 2018, 1:42 PM IST
Highlights

தாயைப் பார்த்துக்கொள்ள நியமிக்கப்பட்ட வேலைக்காரப் பெண்ணை முதலாளிக்கு ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நாமக்கல் முதன்மை நீதிமன்ற நீதிபதி அதிரடி தீர்ப்பளித்தார்.
 

நாமக்கல்

தாயைப் பார்த்துக்கொள்ள நியமிக்கப்பட்ட வேலைக்காரப் பெண்ணை முதலாளிக்கு ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நாமக்கல் முதன்மை நீதிமன்ற நீதிபதி அதிரடி தீர்ப்பளித்தார்.

நாமக்கல் மாவட்டம், இராசிபுரம், வெண்ணந்தூர், மொட்டையகௌண்டர் தோட்டத்தைச் சேர்ந்தவர் தனபாலன் (59). இவர் நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தில் மேனேஜராக பணியாற்றியவர். தற்போது பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். 

அதனைத் தொடர்ந்து அவர் வெண்ணந்தூரில் விவசாயம் பார்த்து வந்தார். தனது தாயாரைப்  பார்த்துக்கொள்ள சேலம், சிவதாபுரத்தில் உள்ள திருமலைகிரியைச் சேர்ந்த ரதி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவரை வேலைக்காரியாக நியமித்திருந்தார். 

இந்த நிலையில் கடந்த 2013 ஏப்ரல் 22-ஆம் தேதி தனபாலனின் வீட்டின் அருகில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றார் ரதி. இதனைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டபின்னர் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த வெண்ணந்தூர் காவலாளர்கள் ரதியின் தற்கொலை முயற்சிக்கான காரணத்தை விசாரிக்க ஆரம்பித்தனர். இதில், "தனபாலன், வேலைக்காரப் பெண்ணான ரதியை கற்பழித்து தொடர்ந்து மிரட்டியுள்ளார் என்பது தெரியவந்தது. 

இதையடுத்து வழக்குப்பதிந்த காவலாளர்கள் தனபாலனை கைது செய்து நாமக்கல் முதன்மை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர். அங்கு நீதிபதி இளவழகன் முன்னிலையில் வழக்கு நடைபெற்று வந்தது. 

இந்த வழக்கு விசாரணை முடிந்த நிலையில் நேற்று நீதிபதி இளவழகன் தீர்ப்பு வழங்கினார். அதில், "வேலைக்கார பெண்ணை கற்பழித்த குற்றத்திற்காக முதலாளி தனபாலனுக்கு ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுகிறது" என்று உத்தரவிட்டு இருந்தார்.

ஐந்து ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கில் இறுதியாக தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

click me!