வங்கி வாங்கிய கடனுக்காக சரவண பவன் ஹோட்டலுக்கு சொந்தமான 7.5 ஏக்கர் நிலம் ஜப்தி.. நடந்தது என்ன..?

Published : Oct 03, 2022, 02:54 PM IST
வங்கி வாங்கிய கடனுக்காக சரவண பவன் ஹோட்டலுக்கு சொந்தமான 7.5 ஏக்கர் நிலம் ஜப்தி.. நடந்தது என்ன..?

சுருக்கம்

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள கூட்டுறவு வங்கியில் சரவணபவன் ஹோட்டல் நிர்வாகத்தினர் கடந்த 2018 ஆம் ஆண்டு ரூ.25 கோடி கடன் வாங்கியது.    

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள கூட்டுறவு வங்கியில் சரவணபவன் ஹோட்டல் நிர்வாகத்தினர் கடந்த 2018 ஆம் ஆண்டு ரூ.25 கோடி கடன் வாங்கியது.  

அதற்கு கோயம்பேடு அருகே உள்ள ஹோட்டலுக்கு சொந்தமான 7.5 ஏக்கர் நிலத்தை அடமானம் வைத்து கடன் பெறப்பட்டுள்ளது. ஆனால் கடன் வாங்கியதில் இருந்து இதுவரை அசல் மற்றும் வட்டி எதுவும் செலுத்தவில்லை. வட்டி செலுத்தாததால் கடன் தொகை ரூ.40 கோடியாக உயர்ந்துள்ளது. 

மேலும் படிக்க:குரோம்பேட்டையில் தம்பதி கழுத்து அறுக்கப்பட்டு மர்ம மரணம்; காவல்துறை விசாரணை

இதனையடுத்து வங்கி சார்பில் எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அடமானம் வைத்த சரவணபவன் ஹோட்டலுக்கு சொந்தமான 7.5 ஏக்கர் நிலத்தை ஜப்தி செய்யுமாறு உத்தரவிட்டது.  சில தினங்களுக்கு முன்பு வங்கி ஊழியர்கள் காவல்துறையினர் பாதுகாப்புடன் அந்த இடத்திற்கு சென்று ஜப்தி குறித்து நோட்டீஸ் ஒட்டி சென்றனர். 
 
ஹோட்டல் நிர்வாகம் சம்பந்தப்பட்ட இடத்தை தனியாருக்கு வாடகைக்கு விட்டுள்ளது. அங்கு வட மாநில தொழிலாளர்கள் தகரங்களை கொண்டு கூடாரம் அமைத்து தங்கியுள்ளனர்.  இந்நிலையில் நேற்று முன்தினம் அங்கு இருப்பவர்களை வெளியேற்றி வங்கி ஊழியர்கள் அந்த இடத்திற்கு சீல் வைத்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் படிக்க:தூய்மையற்ற மாநிலமாக தமிழகம்.! சென்னை,மதுரைக்கு எத்தனையாவது இடம் தெரியுமா.?- ஸ்டாலினுக்கு எதிராக சீறும் ஓபிஎஸ்

PREV
click me!

Recommended Stories

இலங்கைக்கு உதவிய தமிழகம்: புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 950 டன் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைப்பு
இப்படியொரு ப்ளானா..? டபுள் ஸ்டாண்ட் விஜயின்..! என்.டி.ஏ கூட்டணிக்கு கேட் போடும் ராகுல்..! திமுகவுக்கு திருகுவலி..!