Bharat Bandh: மக்கள் கவனத்திற்கு.. நாளை 60 % பேருந்துகள் இயங்கும்.. தொழிற்சங்கங்கள் அறிவிப்பு..

Published : Mar 28, 2022, 03:56 PM IST
Bharat Bandh: மக்கள் கவனத்திற்கு.. நாளை 60 % பேருந்துகள் இயங்கும்.. தொழிற்சங்கங்கள் அறிவிப்பு..

சுருக்கம்

தமிழகத்தில் வேலை நிறுத்த போராட்டத்தினால் இன்று பெரும் இடங்களில் பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் கடும் பாதிப்பு உள்ளான நிலையில் நாளை 60 சதவிகிதம் வரை பேருந்துகளை இயக்க முடிவு செய்துள்ளதாக தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளனர். 

தமிழகத்தில் வேலை நிறுத்த போராட்டத்தினால் இன்று பெரும் இடங்களில் பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் கடும் பாதிப்பு உள்ளான நிலையில் நாளை 60 சதவிகிதம் வரை பேருந்துகளை இயக்க முடிவு செய்துள்ளதாக தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளனர். 

மத்திய அரசை கண்டித்து அகில இந்திய பொது வேலைநிறுத்தம் இன்றும் நாளையும் கடைபிடிக்கப்படுகிறது. நாடு முழுவதும் தொழிற்சங்கங்கள் மேற்கொண்டுள்ள இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில், முதல் நாளான இன்று தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வங்கிகள், பேருந்துகள், கடைகள் இயங்கவில்லை. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரும் அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. 

மத்திய அரசு ஊழியர்களுக்கான 18 மாத அகவிலைப்படி நிலுவையை உடனே வழங்க வேண்டும், மத்திய அரசு அலுவலகங்களில் உள்ள 8.75 லட்சம் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்,  பொதுத் துறை வங்கிகளை தனியார்மயமாக்க கூடாது என்பன உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய அளவில் பொது வேலை நிறுத்த போராட்டத்தில் மத்திய அரசு ஊழியர்கள் ஈடுப்பட்டுள்ளனர். 

இதில் மத்திய, மாநில அரசு ஊழியர்களின் அகில இந்திய அமைப்புகள், காப்பீட்டு நிறுவனங்கள், வங்கி உள்ளிட்ட பொதுத் துறை நிறுவனங்களின் தொழிற்சங்கங்கள் பங்கேற்றுள்ளன. இன்றும், நாளையும் (மார்ச் 28, 29) நாடுதழுவிய பொது வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தினால் , குறிப்பாக பேருந்து மற்றும் வங்கி சேவைகள் கடுமையாக பாதிக்கப்ப்டடன. 

தொழிற்சங்கங்கள் சார்பில் பல்வேறு இடங்களில் மத்திய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் போராட்டத்தின் அடுத்தகட்டம் குறித்து, அனைத்து போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கம் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.அதில், “தமிழகத்தில் மத்திய அரசை கண்டித்து வெற்றிகரமாக முதல் நாள் போராட்டம் நடைபெற்று வருகிறது. பேருந்து, வங்கி சேவைகள் நிறுத்தப்பட்டதால், பொதுமக்கள் கடும்பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. மேலும் தற்போது மாணவர்களுக்கு தேர்வு நடைபெற்று வருகிறது. எனவே, நாளை 60 சதவிகிதம் வரை பேருந்துகளை இயக்க முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே நாளை நடைபெற உள்ள போராடத்தில் முன்னணி நிர்வாகிகள் ஈடுப்பட உள்ளதாகவும் மற்ற தொழிலாளர்கள் பேருந்துகளை இயக்கவும் முடிவு செய்துள்ளோம் என்று கூறியுள்ளனர். மேலும், அத்தியாவசியப் பணிகள் பாதிக்கப்படாத வகையில், தமிழகத்தில் பிற பணிகளை தொடரும் வகையில் பொதுத்துறை நிறுவனங்கள், வங்கிகளின் தொழிற்சங்க கூட்டமைப்பினர் கூடி முடிவெடுப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டது.

PREV
click me!

Recommended Stories

போலீஸ் கையைப் பிடித்து கடித்துக் குதறிய தவெக தொண்டர்.. வைரலாகும் விஜய் ரசிகரின் வெறித்தனம்!
அரசு பள்ளி மாணவர்களுக்கு தரமற்ற இலவச சைக்கிள்.. அண்ணாமலையின் பகீர் குற்றச்சாட்டு!