
வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை அருகே சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் இருசக்கர வாகனத்தில் வந்த கொள்ளையர்கள் இரண்டு பேர் 6 சவரன் நகையை பறித்துச் கொண்டு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் இராணிப்பேட்டையை சேர்ந்தவர் முன்னாள் ராணுவ வீரரின் மனைவி எல்லம்மாள்.
இவர் தினமும் காலையில் மாடுகளை மேய்ச்சலுக்காக அழைத்து சென்றுவிட்டு மதியம் வீடு திரும்புவார்.
இந்நிலையில், ராணிப்பேட்டை அருகே பெரியந்தாங்கலில் தனது மாடுகளை மேய்ச்சலுக்காகச் அழைத்து கொண்டு சாலையில் கொண்டு இருந்தார்.
அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்ம நபர்கள் எல்லம்மாளைத் திடீரெனத் தாக்கி விட்டு அவர் கழுத்தில் அணிந்திருந்த 6 சவரன் தங்க சங்கிலியைப் பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
இதையடுத்து எல்லம்மாள் இது குறித்துக் போலீசாரிடம் புகார் அளித்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை வருகின்றனர்.