மகிழ்ச்சி செய்தி.. ஒப்பந்த பெண் பணியாளர்களுக்கு 6 மாதம் மகப்பேறு விடுப்பு.. அமைச்சர் அறிவிப்பு..

By Thanalakshmi VFirst Published May 22, 2022, 2:56 PM IST
Highlights

சுகாதாரத்துறையில் ஒப்பந்தம் அடிப்படையில் பணியாற்றும் பெண் பணியாளர்களுக்கு 6 மாதம் மகப்பேறு விடுப்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
 

சுகாதாரத்துறையில் ஒப்பந்தம் அடிப்படையில் பணியாற்றும் பெண் பணியாளர்களுக்கு 6 மாதம் மகப்பேறு விடுப்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்ரமணியன், சுகாதாரத்துறையில் 5971 பேருக்கு ரூ32 கோடி செலவில் சம்பள உயர்வு வழங்கப்பட உள்ளது. அதே போல் , சுகாதாரத்துறையில் பணியாற்றும் ஒப்பந்த பெண் பணியாளர்களுக்கு 6 மாதம் மகப்பேறு விடுப்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.

மேலும் படிக்க: இந்தியாவின் அடுத்த பிரதமர் யார்? கருத்துக் கணிப்பில் வெளியான ‘அதிர்ச்சி’ தகவல் ! அப்போ இவருதானா ?

மேலும் மாநிலம் முழுவதும் சுகாதாரத்துறையில் பணியாற்றும் 2,448 ஒப்பந்த பணியாளர்கள் சம்பளம் மாதம் ரூ.11 ஆயிரத்தில் இருந்து ரூ,14 ஆயிரமாக உயர்த்தபடும் என்றும் இல்லம் தேடி மருத்துவ திட்டத்தில் பணியாற்றும் 4,848 பணியாளர்களுக்கு சம்பளம் ரூ.14 ஆயிரத்தில் இருந்து ரூ.18 ஆயிரமாக உயர்த்தப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.மேலும் ஊட்டசத்து குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு புனர்வாழ்வு அமைக்கப்படும் என அமைச்சர் மா.சுப்ரமணியன் பேசினார்.

மேலும் படிக்க: முதல்வர் மு.க ஸ்டாலினின் ஓராண்டு செயல்பாடு எப்படி? கருத்து கணிப்பில் வெளியான தகவல் !

click me!