6 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்.. தமிழக அரசு அதிரடி..!

Published : Oct 06, 2022, 03:50 PM IST
6 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..  தமிழக அரசு அதிரடி..!

சுருக்கம்

தமிழகதத்தில் 6 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழகதத்தில் 6 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக உள்துறை கூடுதல் தலைமை செயலாளர் பனீந்திர ரெட்டி பிறப்பித்த உத்தரவில்;- சென்னை வடக்கு மண்டல ஐஜி தேன்மொழி மாற்றப்பட்டு, சிபிசிஐடி சிறப்பு புலனாய்வு பிரிவு ஐஜியாகவும், ஆயுதப்படை பிரிவு ஐஜி கண்ணன் வடக்கு மண்டல ஐஜியாவும், சென்னை பரங்கிமலை துணை ஆணையர் பிரதீப், செங்கல்பட்டு காவல் கண்காணிப்பாளராகவும், தமிழ்நாடு சிறப்பு காவல் படை 5-வது படைப்பிரிவு காமண்டர் தீபக் சிவாச், சென்னை பரங்கிமலை துணை ஆணையராகவும், தமிழ்நாடு சிறப்பு காவல் படை 10-வது படைப்பிரிவு காமண்டர் சமய் சிங் மீனா, சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துணை ஆணையராகவும் (கிழக்கு), சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துணை ஆணையர் (கிழக்கு) குமார், தமிழ்நாடு சிறப்பு காவல் படை 10-வது படைப்பிரிவு காமண்டராகவும் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Chicken: சிக்கன் வித் ஸ்கின்னுடன் வாங்குறீங்களா? அதனால இவ்ளோ நல்லது இருக்குது தெரியுமா?
TN Rain Update: தமிழகத்தில் 17 மாவட்டங்களில் மழை.. 4 மாவட்டங்களில் கனமழை.. எங்கெல்லாம் தெரியுமா?