குடிமகன்களுக்கு ‘ஷாக்’ தந்த டாஸ்மாக்… 6 நாள் சமாளிக்க முடியுமா…?

By manimegalai aFirst Published Oct 1, 2021, 7:05 AM IST
Highlights

உள்ளாட்சி தேர்தல் நடக்க இருக்கும் பகுதிகளில் 6 நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னை: உள்ளாட்சி தேர்தல் நடக்க இருக்கும் பகுதிகளில் 6 நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கு வரும் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. தேர்தலை முன்னிட்டு அனைத்து அரசியல் கட்சிகள், சமூக நல அமைப்பினர் உள்ளிட்ட பலரும் படு பிசியாக உள்ளனர்.

தேர்தல் நடக்க இருக்கும் 9 மாவட்டங்களிலும் கடும் கட்டுப்பாடுகள், நடத்தை விதிகளை அறிவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந் நிலையில் உள்ளாட்சி தேர்தல் நடக்க இருக்கும் மாவட்டங்களில் 6 நாட்கள் டாஸ்மாக் கடைகள் இயங்க தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

அதன்படி வரும் 4ம் தேதி முதல் 9ம் தேதி வரை தேர்தல் நடக்கும் மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் இயங்காது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் தமிழகம் முழுவதும் நாளையும், மிலாடி நபி தினமான வரும் 19ம் தேதியும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இவ்விரண்டு நாட்களுக்கு பார்களும் மூடப்படும் என்று கூறப்பட்டு உள்ளது.

டாஸ்மாக் கடைகள் விடுமுறை பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளதால் குடிமகன்கள் இப்போதே வேண்டியதை ஸ்டாக் வைக்க ஆரம்பித்து உள்ளனர். அதற்காக கடைகளிலும் கூடுதலாக மதுபானங்கள் இருப்பு வைக்கப்பட்டு வருகின்றன.

 

click me!