
செம்மரம் வெட்டியதாக கூறி ஆந்திராவில் 52 தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆந்திர மாநிலம் கடப்பாவில் 50க்கும் மேற்பட்ட கடத்தல்காரர்கள் செம்மரங்களை வெட்ட ஊடுருவியுள்ளதாக ஆந்திரபோலீசுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அவர்கள் கடப்பா வனப்பகுதியில் ரோந்து சென்ற போது 50க்கும் மேற்பட்டோர் செம்மரங்களை வெட்டி கொண்டிருப்பதை பார்த்து அவர்களை சுட்டி வளைத்து கைது செய்ததாக ஆந்திர காவல்துறை தெரிவித்துள்ளது.
கைது செய்யபட்ட அனைவரும் வேலூர், கிருஷ்ணகிரி, திருவண்ணமலை மாவட்டங்களை சேர்ந்த தமிழர்கள் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
அது மட்டுமல்லாமல் மேலும் 150க்கும் மேற்பட்ட தமிழர்கள் செம்மரங்களை வெட்டுவதற்காக ஆந்திர வனப்பகுதி முழுவதும் பதுங்கியிருப்பதாக ஆந்திர காவல்துறை குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இதனால் ஆந்திர வனப்பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.
செம்மரம் வெட்டுவதாக கூறி தமிழர்களை கைது செய்யும் போக்கு சில நாட்களாக ஓய்ந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் தலை தூக்கியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.