சென்னையில் உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் மிக்ஜாம் நிவாரண தொகைக்காக 5.5 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாகவும், கணக்கெடுக்கும் பணி இன்று முதல் தொடங்க உள்ளது எனவும் தமிழ்நாடு அரசின் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
சென்னை வெள்ள பாதிப்பு
தமிழகத்தில் 2023 டிசம்பர் 3 மற்றும் 4 ஆகிய தினங்களில் வீசிய மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பெரும் மழைப்பொழிவின் காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்து மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. பல இடங்களில் கார்களையும் வெள்ளம் அடித்து சென்றது. இதனையடுத்து தமிழக அரசு சார்பாக மீட்பு பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது. இந்தநிலையில் “மிக்ஜாம்” புயல் வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக ரூபாய் 6 ஆயிரம் ரொக்கமாக வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் அறிவிப்பை வெளியிட்டார்.
நிவாரணத் தொகை- கணக்கெடுப்பு பணி
மேலும் திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளுக்கும் வெள்ள நிவாரணத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. வெள்ளத்தால் பபாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயவிலைக் கடைகள் மூலமாக ரூ.6000 நிவாரணத் தொகை கடந்த 17ம் தேதி முதல் வழங்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் சர்க்கரை ஆட்டை உள்ளவர்கள், வருமான வரி செலுத்துபவர்கள், மத்திய மாநில அரசு ஊழியர்கள் பாதிப்பு கூடுதலாக இருக்கும் விவரத்தை பூர்த்தி செய்து, ரேஷன் கடைகளில் கொடுத்தால், அவர்களுக்கும் நிவாரணம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தமிழ்நாடு அரசின் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
ஒரு வாரத்தில் நிவராணத்தொகை
அதன் படி நான்கு மாவட்டங்களையும் சேர்த்து 5.5 லட்சம் பேர் விண்ணப்பித்திருப்பதாகவும், விண்ணப்பங்களை கணக்கெடுக்கும் பணி இன்று முதல் தொடங்கியுள்ளது என்றும், முழுமையான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு ஒரு வார காலத்திற்குள் அவர்களது வங்கி கணக்கில் நிவாரணத் தொகை சென்றடைய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தமிழ்நாடு அரசின் அதிகாரிகள் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்
Ponmudi Case : பொன்முடியின் சொத்துக்களை முடக்க வேண்டுமா.? உயர் நீதிமன்றம் அளித்த முக்கிய உத்தரவு