ஆவினில் பணி நியமனத்தில் முறைகேடு..! 236 பேருடைய பணி நியமன உத்தரவு ரத்து- பால்வளத்துறை அதிரடி

By Ajmal KhanFirst Published Jan 4, 2023, 10:15 AM IST
Highlights

மதுரை  ஆவினில் 2020-21 ஆம் ஆண்டில் பணி நியமன முறைகேடு நடைபெற்றதாக புகார் வந்ததையடுத்து பணி நியமனம் பெற்ற 47 பேருடைய பணி நியமனத்தை ரத்து செய்து பால்வளத்துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ஆவினில் முறைகேடாக பணி நியமனம்

மதுரை ஆவினில் கடந்த 2020 மற்றும் 2021ல் மேலாளர், எக்ஸிகியூடிவ் உட்பட 61 பணியிடங்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் நியமனம் செய்யப்பட்டது. அப்போது இந்த நியமனத்தில் தகுதியற்றவர்க்குக்கு பணி வழங்கியதாகவும், எழுத்து தேர்வுக்கான வினாத்தாள்கள் முன்னதாக வெளியானதாகவும் புகார் கூறப்பட்டது.  மேலும்  காசோலை மோசடி, தகுதியானவர்களை நேர்காணலுக்கு அழைக்காதது, விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த 17 பேருக்கு நியமனம் வழங்கியது உள்ளிட்ட முறைகேடுகள் நடந்ததாக புகார் கொடுக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து மதுரை ஆவினில் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை மேற்கொண்டது. இதில் முறைகேடாக பணி நியமனம் செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது. 

பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படுமா..? அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய ஆலோசனை.?

47 பேர் அதிரடியாக பணி நீக்கம்

இது தொடர்பான அறிக்கை ஆவின் பால்வளத்துறை ஆணையருக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் மதுரை ஆவின் நிறுவனத்தில் கடந்த 2020, 2021-ம் ஆண்டுகளில் பணி நியமன முறைகேடு புகாரில் பணி நியமனம் பெற்ற 236 பேருடைய பணி நியமன உத்தரவு  தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டப் பிரிவு 81ன் கீழ் ரத்து செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், 147 பணி நியமனத்திற்கான அறிவிப்புகளை ரத்து செய்து பால்வளத்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.  ஆவின் நிர்வாகத்தின் அதிரடி உத்தரவால் பணியில் சேர்ந்து 2 ஆண்டுகள் ஆன நிலையில்  தகுதியின் அடிப்படையில் தேர்வானவர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ஒரே நாளில்  236 பணியாளர்கள் நீக்கப்பட்டதால் ஆவினில் பணியாளர்கள் தட்டுப்பாட்டால் பணிகள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 

இதையும் படியுங்கள்

வரி ஏய்ப்பு புகார்..! தமிழகத்தில் 30 இடங்களில் வருமான வரித்துறை அதிரடி சோதனை

click me!