திருவிழாவின்போது திருடுபோன 44 சவரன் நகைகள் மீட்பு – சபாஷ் காவல்துறை…

 
Published : Oct 12, 2017, 06:37 AM ISTUpdated : Sep 19, 2018, 01:17 AM IST
திருவிழாவின்போது திருடுபோன 44 சவரன் நகைகள் மீட்பு – சபாஷ் காவல்துறை…

சுருக்கம்

44 pound Jewelery Rescuers Stolen during the Festival - Subhash Police ...

தூத்துக்குடி

குலசேகரன்பட்டினத்தில் நடந்த தசரா திருவிழாவின்போது அடியார்களிடம் இருந்து திருடப்பட்ட 44 சவரன் தங்க நகைகள் மீட்கப்பட்டன. மேலும், அதனை திருடிய பெண்ணையும் காவலாளர்கள் கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா நடைப்பெற்றபோது ஏராளமான அடியார்கள் பங்கேற்றனர். அப்போது, அடியார்களிடம் இருந்து 44 சவரன் தங்க நகைகளை மர்ம நபர் திருடி விட்டார்.

இதுதொடர்பாக குலசேகரன்பட்டினம், திருச்செந்தூர் காவல் நிலையங்களில் மொத்தம் 13 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு காவலாளர்கள் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் அந்தப் பகுதியில் சந்தேகப்படும் படியாக சுற்றித் திரிந்த ஒரு பெண்ணை பிடித்து விசாரித்ததில் அவர் தஞ்சாவூரைச் சேர்ந்த சுகுணா (37) என்பதும், தசரா திருவிழாவில் நகை திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டது இவர்தான் என்பதும் தெரியவந்தது.

இதனையடுத்து சுகுணாவை காவலாளர்கள் கைது செய்து, அவரிடம் இருந்து 44 சவரன் தங்க நகைகளை மீட்டுள்ளனர்.

PREV
click me!

Recommended Stories

Tamil News Live today 13 December 2025: தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு
மக்களே வாய்ப்பை தவறவிட்டுடாதீங்க.. ரொம்ப கம்மி வட்டியில் ரூ.10 லட்சம் வரை கடன்.! அள்ளி கொடுக்கும் தமிழக அரசு!