Omicron in tamilnadu : தமிழகத்தில் மேலும் 4 பேருக்கு ஒமைக்ரான்? ஷாக் கொடுத்த ராதாகிருஷ்ணன்!!

By Narendran SFirst Published Dec 16, 2021, 9:33 PM IST
Highlights

தமிழகத்தில் மேலும் 4 பேருக்கு ஒமைக்ரானுக்கு முந்தைய அறிகுறி இருக்கலாம் என சந்தேகம் உள்ளதாக மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் மேலும் 4 பேருக்கு ஒமைக்ரானுக்கு முந்தைய அறிகுறி இருக்கலாம் என சந்தேகம் உள்ளதாக மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தென் ஆப்பிரிக்காவில் கடந்த 24 ஆம் தேதி ஓமைக்ரான் வகை வைரஸ் முதல் முறையாக கண்டறியப்பட்டது. உலக சுகாதார அமைப்பால் கண்டறியப்பட்ட இந்த வைரஸ் பின்னர் ஹாங்காங், போட்ஸ்வானா, இஸ்ரேல் நாடுகளிலும் கண்டறியப்பட்டது. இந்த ஓமைக்ரான் வகை வைரஸ் இதுவரை கண்டறியப்பட்ட வைரஸ்களில் மிகவும் வேகமாகப் பரவும் தன்மை கொண்டதாகவும், தடுப்பூசியை அதிகமாக எதிர்க்கும் தன்மை கொண்டதாகவும் அறிகுறிகளும் தீவிரத்தன்மை கொண்டதாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர். ஓமைக்ரான் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் அனைத்து நாடுகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை உருமாறிய கொரோனா வைரஸ்களில் டெல்டா வகை வைரஸ் அதிக ஆபத்தானது என்று கூறப்பட்ட நிலையில் தற்போது அதை விட வீரியமானது இந்த ஓமைக்ரான் வகை வைரஸ் என்று கூறப்படுகிறது.

இது 32 முறை உருமாற்றமடைந்து ஓமைக்ரானாக பரவி வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் ஒருவருக்கு ஒமிக்ரான் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக நேற்று தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். நைஜீரியாவில் இருந்து வந்த அந்த நபரோடு தொடர்பில் இருந்த மேலும் 7 பேருக்கு புதிய வகை கொரோனா இருக்குமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. ஒமிக்ரான் உறுதியான நபருடன் தொடர்பில் இருந்த 7 பேரின் மாதிரிகளும் பரிசொதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒருவருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதியான நிலையில் அனைத்து மாவட்டங்களிலும் பாதுகாப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த அறிவுறுத்தியுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்திருந்தார். இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், நைஜீரியாவில் இருந்து வந்த நபருக்கு ஒமிக்ரான் உறுதியான நிலையில் அவருடன் தொடர்பில் இருந்த 7 பேருக்கு 'S' வகை திரிபு கண்டறியப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

இதேபோன்று, காங்கோவில் இருந்து தமிழகம் வந்த பெண்ணிற்கும் 'S' வகை திரிபு உள்ளது என்று குறிப்பிட்டு உள்ளார். தமிழகத்தில் மேலும் 4 பேருக்கு ஒமைக்ரானுக்கு முந்தைய அறிகுறி இருக்கலாம் என சந்தேகம் உள்ளதாக கூறிய மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சென்னை வளசரவாக்கத்தில் ஒருவருக்கு நேற்று மாற்றமடைந்த தொற்று கண்டறியப்பட்ட நிலையில், அவருடன் தொடர்புடைய 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் ஒரே இடத்தில் இருந்து 11 பேருக்கு கொரோனா பரவி உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மரபணு மாற்றமடைந்த கொரோனா உறுதியானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறியும் பணி நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

click me!