Semester exam : ஜன.21 முதல் பொறியியல் மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வு… அறிவிப்பை வெளியிட்டது அண்ணா பல்கலை.!!

By Narendran SFirst Published Dec 16, 2021, 7:46 PM IST
Highlights

பொறியியல் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு ஜனவரி 21 முதல் மார்ச் 2 வரை பல்வேறு கட்டங்களாக நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. 

பொறியியல் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு ஜனவரி 21 முதல் மார்ச் 2 வரை பல்வேறு கட்டங்களாக நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. கொரோனா காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்படாமல் இருந்தது. பின்னர்  ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தபட்டு வந்தது. மேலும் தேர்வுகளும் ஆன்லைன் மூலமாகவே  நடத்தப்பட்டது. இந்த நிலையில் கொரோனா பாதிப்பு சற்று குறைந்து உள்ளதால் மீண்டும் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கி உள்ளது. இதை அடுத்து அனைத்து பள்ளி, கல்லூரிகளும் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

இதனிடையே தேர்வுகள் நேரடியாக நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டதற்கு எதிரிப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இருந்த போதிலும் நேரடியாக மட்டுமே தேர்வுகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் பொறியியல் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு ஜனவரி 21 முதல் மார்ச் 2 வரை பல்வேறு கட்டங்களாக நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

இதுக்குறித்து அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஜனவரி 21 ஆம் தேதி முதல் பல்வேறு கட்டங்களாக பொறியியல் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு நடத்தப்படும் என்றும் நவம்பர் – டிசம்பர் மாதம் நடைபெற இருந்த தேர்வுகள் ஜனவரி முதல் மார்ச் வரை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, M.E., M.Tech., M.Arch., மாணவர்களுக்கும் ஜனவரி 21 முதல் பிப்ரவரி இறுதி வரை தேர்வு நடைபெற உள்ளதாகவும் B.E., B.Arch., மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு ஜனவரி 21 முதல் மார்ச் 2 வரை பல்வேறு கட்டங்களாக நடைபெறும் என்றும் குறிப்பிட்டுள்ளது. மேலும் அரியர் மாணவர்களுக்கும் சிறப்பு வாய்ப்பாக நேரடி முறையில் செமஸ்டர் தேர்வு நடைபெற உள்ளது எனவும் அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. 

click me!