Jos alukkas Robbery CCTV: அம்மாடியோவ்..! மகா கொள்ளையன் போல..! அதிர வைத்த புது அப்டேட்..

Published : Dec 16, 2021, 06:38 PM IST
Jos alukkas Robbery CCTV: அம்மாடியோவ்..! மகா கொள்ளையன் போல..! அதிர வைத்த புது அப்டேட்..

சுருக்கம்

வேலூர் மாவட்டத்தில் பிரபல ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் கொள்ளையடித்தவனின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.  

வேலூர் மாவட்டம் தோட்டபாளையத்தில் இயங்கி வரும் ஜோஸ் ஆலுக்காஸ்  நகைகடையில் சுவர் வழியே துளையிட்டு சுமார் 15 கோடி மதிப்பிலான தங்கம், வைர நகைகள் கொள்ளையடிக்க சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் சிங்க முகமுடி அணிந்து கையில் ப்ரே பாட்டிலுடன் கொள்ளையன் உலவும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. 

வேலூர் தோட்டப்பாளையம் பகுதியில் காட்பாடி சாலையில் பிரபல ஜோஸ் ஆலுக்காஸ் நகைக் கடை அமைந்துள்ளது. 5 தளங்களுடன் இயங்கி வரும் நகைகடையில், தரைத் தளம் மற்றும் முதல் தளத்தில் மட்டுமே விற்பனை நடைபெற்று வருகிறது. கடையின் 5 ஆவது தளத்தில் கடையில் ஊழியர்கள் தங்கி பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது. அது போல் இரவு நேரத்தில் பாதுக்காப்பிற்காக காவலர்கள் பணியமர்த்தப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தான் நேற்றிரவு கடையின் பின்பக்க சுவரில் துளையிட்டு, கொள்ளை சம்பவம் ஒன்று அரங்கேறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் போலீசார் விசாரணையில், கடையில் பின்பக்க சுவற்றில் துளையிட்டு ஏசி வெண்டிலேட்டர் வழியாக உள்ளே நுழைந்து நகைகளை திருட்டி சென்றதாக கூறப்பட்டது. மேலும் சுமார் 8 கோடி ரூபாய் மதிப்புள்ள 15 கிலோ 800 கிராம் தங்கம் மற்றும் வைர நகைகள் திருட்டு போயுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். கொள்ளையர்களை பிடிக்க 4 டிஎஸ்பிக்கள் தலைமையில் 8 தனிபடைகள் அமைக்கப்பட்டுள்ளன. திருச்சி லலிதா ஜூவல்லரி நகை கடை கொள்ளை சம்பவத்தில் ஈடுப்பட்டவர்களுக்கு இதில் தொடர்பு இருக்கலாம் எனும் கோணத்தில் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளதாக வடக்கு மண்டல் ஜஜி சந்தோஷ் குமார் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் சிங்க முகமூடி போட்டுக்கொண்டு கொள்ளையன், கடையில் உள்ள சிசிடிவி கேமிராக்கள் மீது ஸ்பிரே அடிக்கும் காட்சி தற்போது வெளியாகியுள்ளது. மேலும் கடையில் அந்த தளத்திலுள்ள அனைத்து சிசிடிவி கேமிராவிற்கும் ஸ்பிரே அடித்து விட்டதால், எந்த காட்சிகளும் கேமராவில் பதிவாகவில்லை என்று போலிஸ் தரப்பில் கூறப்படுகிறது. எனினும் நகைக் கடையை சுற்றியுள்ள சாலைகள், பக்கத்து கட்டடங்களில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவிகள் காட்சிகளைக் கொண்டு விசாரணை நடந்து வருகிறதாக கூறப்படுகின்றது. 

இதனிடையே நகைகடை கொள்ளை சம்பவத்தில் ஈடுப்பட்டது உள்ளூர் கொள்ளையர்களா அல்லது வடமாநிலத்தவர்களின் வேலையா எனும் கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறதாக தெரிகிறது. முன்னதாக நகைக் கடையின் சுற்றுச்சுவரில் ஒரு தலைமுடி விக் கிடந்தது குறிப்பிடத்தக்கது. அதை கைப்பற்றிய போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் சிங்க முகமுடி அணிந்து கையில் ப்ரே பாட்டிலுடன் கொள்ளையன் உலவும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. 

PREV
click me!

Recommended Stories

இன்னும் மழையின் ஆட்டம் முடியல! வானிலை மையம் எச்சரிக்கையும்! டெல்டா வெதர்மேனின் அப்டேட்டும்
வளர்ச்சி அரசியலா..? டேஷ் அரசியலா..? மாமதுரையில் நிகழும் அசாதாரண சூழல்.. முதல்வர் பரபரப்பு