Lok Sabha Election : வாக்களிக்க சென்னையில் இருந்து வெளியூர் சென்றவர்கள் இத்தனை லட்சம் பேரா.? வெளியான லிஸ்ட்

By Ajmal Khan  |  First Published Apr 19, 2024, 9:14 AM IST

நாடாளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதற்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்ட நிலையில், கடந்த 2 நாட்களில் மட்டும் அரசு பேருந்துகளில் மட்டும் 4 லட்சம் பேர் பயணித்துள்ளனர். 
 


வாக்குப்பதிவு தொடங்கியது

நாடாளுமன்ற தேர்தல் தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளில் இன்று நடைபெறுகிறது. தமிழகத்தில் 6 கோடியே 21 லட்சம் பேர் வாக்களிக்கவுள்ளனர்.  தமிழகத்தில் 68 ஆயிரம் வாக்குசாவடி உள்ள நிலையில் 44800வாக்கு சாவடிகளில் வெப் கேமரா மூலமாக முழுவதும் கண்காணிக்கப்படவுள்ளது. இந்த தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள வாக்காளர்கள் ஜனநாயக கடமையாற்ற வேண்டும் என தேர்தல் ஆணையம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதற்காக வாக்குப்பதிவு நாளான இன்று அரசு விடுமுறையும் விடப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்களும் விடுமுறை விட உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னையில் பணி நிமித்தமாக தங்கியிருந்தவர்கள் பேருந்து, ரயில், சொந்த வாகனங்கள் மூலம் தங்களது சொந்த ஊருக்கு படையெடுத்துள்ளனர். 

Latest Videos

பேருந்தில் பயணம்

இது தொடர்பாக போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், போக்குவரத்து துறையின் சார்பில்,  பாராளுமன்ற தேர்தல்-2024 முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு பேருந்துகளின் இயக்கம்  நேற்று (18/04/2024) நள்ளிரவு 12 .00  மணி  நிலவரப்படி, வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கையான 2,092 பேருந்துகளில் 2092 பேருந்துகளும்   2308 சிறப்புப் பேருந்துகளும் ஆக மொத்தம்  4,400 பேருந்துகளில் 2,42,000 பயணிகள் பயணம். செய்துள்ளனர். ஆக கடந்த (17/04/2024 முதல் 18/04/2024 வரை) நேற்று நள்ளிரவு 2400 மணி வரையில்  மொத்தம் 7,299 பேருந்துகள் இயக்கப்பட்டன. இப்பேருந்துகளின் வாயிலாக இரண்டு நாட்களில் சுமார் 3,90,800 பயணிகள் பயணித்துள்ளனர்.மேலும் கடந்த இரண்டு தினங்களில்  சென்னையிலிருந்து  31,532   பயணிகள் முன்பதிவு செய்து பயணித்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு நாட்களில் 4 லட்சம் பேர் பயணம்

அதே நேரத்தில் பேருந்தின் மூலம் மட்டுமே கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 4 லட்சம் பேர் பயணித்துள்ள நிலையில், ரயில்கள்,ஆம்னி பேருந்துகள் மற்றும் தனியாக கார்கள் மூலமாகவும் லட்சக்கணக்கான மக்கள் தங்களது சொந்த ஊருக்கு ஜனநாயக கடமையாற்ற சென்றுள்ளனர். இவர்கள் சென்னை திரும்பி வரவும் சிறப்பு பேருந்துகளுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  
 

click me!