அட்டகாசம் செய்யும் காட்டு யானையை பிடிக்க 4 கும்கி யானைகள் வரவழைப்பு - மயக்க ஊசி செலுத்தவும் திட்டம்

First Published Jun 2, 2017, 10:43 AM IST
Highlights
4 kumki elephants came to capture cruel elephant


கோவை போத்தனூர் அருகே சுற்றித்திரியும் காட்டு யானையை பிடிக்க 4 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளன. மேலும் மயக்க ஊசி செலுத்தி செலுத்தி பிடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளன.

கோவை- கணேசபுரத்தை சேர்ந்தவர் ஜோசியர்  விஜயகுமார். இவரது மகள் காயத்ரி. இருவரும் வீட்டின் வெளியே தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது குடியிருப்புப் பகுதியில் நுழைந்த ஒற்றை காட்டு யானை காயத்ரியை தாக்கியது. . இதில் சம்பவ இடத்திலேயே அவர் பலியானார்.

அப்போது காயத்ரியை காப்பாற்ற முயன்ற விஜயகுமாரை யானை தூக்கி வீசியதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதையடுத்து யானையை பிடிக்க வனப்பகுதிக்குள் சென்ற பழனிச்சாமி என்பவரையும் யானை தாக்கியது. அதில் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

இதனைத் தொடர்ந்து வெள்ளலூர் பகுதியில் நுழைந்த காட்டு யானை எதிரில் வருவோரை எல்லாம் தாக்கியது. இதில் ஜோதிமணி, நாகரத்தினம் ஆகியோர் யானை மிதித்ததில் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த 5 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்ததும் வனத் துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று யானையை காடுக்குள் விரட்டியடிக்க முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

மேலும் யாரும் வீட்டைவிட்டு வெளியேற வேண்டாம் என வனத் துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இந்நிலையில், அந்த காட்டு யானையை பிடிக்க 4 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளன. மேலும் மயக்க ஊசி செலுத்தி செலுத்தி பிடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளன.

click me!