தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை.. சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மழை.. வானிலை அப்டேட்..

Published : May 20, 2022, 01:52 PM IST
தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை.. சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மழை.. வானிலை அப்டேட்..

சுருக்கம்

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்க்கு ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 48 மணி நேரத்திற்கு சென்னையில் ஒரு சில இடங்களில் மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.   

இதுக்குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “ வெப்பச்சலனம்‌ காரண மாக,

20.05.2022. 21.05.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

22.05.2022. 23.05.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒருசில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

 24.05.2022: உள்தமிழகத்தில்‌ ஒரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

சென்னையை பொறுத்தவரை:

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை
28 டிகிரி செல்‌சியஸை ஓட்டி இருக்கக்கூடும்‌.

மீனவர்களுக்கான எச்சரிக்கை :

20.05.2022, 21.05.2022: மன்னார்‌ வளைகுடா, குமரிக்கடல்‌ பகுதி, தமிழக கடலோர பகுதி மற்றும்‌ அதனை ஓட்டிய தென்மேற்கு வங்கக்கடல்‌ பகுதிகளில்‌ பலத்தகாற்று மணிக்கு 40 முதல்‌ 50 இலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌. மத்திய கிழக்கு வங்கக்கடல்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய வடக்கு அந்தமான்‌ கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்துலும்‌
இடையிடையே 60 கிலோ மீட்டர்‌ வேகத்துலும்‌ வீசக்கூடும்‌.

வடக்கு கேரளா - கர்நாடக கடலோர பகுதிகள்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய அரபிக்கடல்‌ பகுதிகளில்‌ சூழாவளிக்காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 60 கிலோ மீட்டர்‌ வேகத்துலும்‌ வீசக்கூடும்‌.

22.05.2022, 23.05.2022. 24.05.2022: அந்தமான்‌ கடல்‌ பகுதி, தென்‌ கிழக்கு மற்றும்‌ அதனை ஓட்டிய தென்‌ மேற்கு வங்கக்கடல்‌, மத்திய கிழக்கு வங்கக்கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌
இடையிடையே 60 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌.

மேற்குறிப்பிட்ட நாட்களில்‌ மீனவர்கள்‌ இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்‌ என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: என்ன ஒரு தெனாவட்டு.. ஆண்டாள் கோவில் ஊழியரை காலால் எட்டி உதைத்த அதிகாரி.. வைரலாகும் வீடியோ..!

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Women Free Bus Travel: பெண்களுக்கு இலவச பயணம்.! எந்த பேருந்துகளில் கட்டணம் கிடையாது?
Free 3 LPG Cylinders Per Year: விலையில்லாமல் ஆண்டுக்கு 3 சிலிண்டர்.! யாருக்கு கிடைக்கும் தெரியுமா?