தொடரும் ஐஏஎஸ் அமுதாவின் அதிரடி.. தமிழகத்தில் மேலும் 33 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம்

Published : Aug 06, 2023, 06:53 AM ISTUpdated : Aug 06, 2023, 07:52 AM IST
தொடரும் ஐஏஎஸ் அமுதாவின் அதிரடி.. தமிழகத்தில் மேலும் 33 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம்

சுருக்கம்

தமிழகத்தில் சேலம், திருச்சி, சிவகங்கை, மயிலாடுதுறை உள்ளிட்ட 33 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

தமிழகத்தில் சேலம், திருச்சி, சிவகங்கை, மயிலாடுதுறை உள்ளிட்ட 33 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

இது குறித்து தமிழக உள்துறை செயலாளர் அமுதா வெளியிட்டுள்ள அறிவிப்பில்:

*  காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த எஸ்.பி. ஸ்ரீநாதா, டிஜிபி அலுவலக உதவி ஐ.ஜி.யாக நியமனம்

* சேலம் எஸ்.பி.யாக இருந்த சிவகுமார், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு எஸ்.பி.யாக மாற்றம்

* திருச்சி எஸ்.பி.யாக இருந்த சுஜித்குமார் மதுரை தெற்கு அமலாக்கப் பிரிவு எஸ்.பி.யாக மாற்றம்

* மதுறை தெற்கு மண்டல அமலாக்கப் பிரிவு எஸ்.பி.யாக இருந்த வருண் குமார், திருச்சி மாவட்ட எஸ்.பி.யாக நியமனம்

* சென்னை தியாகராய நகர் துணை ஆணையராக இருந்த அருண் கபிலன், சேலம் எஸ்.பி.யாக நியமனம்

* சென்னை மத்திய பொருளாதார குற்றப்பிரிவு எஸ்.பி. அங்கிட் ஜெயின் தி.நகர் துணை ஆணையராக நியமனம்

* அடையாறு துணை ஆணையர் மகேந்திரன், சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்.பி.யாக நியமனம்

* சென்னை தெற்கு போக்குவரத்து காவல்துறை துணை ஆணையராக மகேஷ்குமார் நியமனம்

* தாம்பரம் துணை ஆணையர் அதிவீரபாண்டியன், நாகை கடலோர பாதுகாப்புப் படை எஸ்.பி.யாக நியமனம்

*  மதுரை வடக்கு காவல் துணை ஆணையராக இருந்த பி.கே. அரவிந்த் சிவகங்கை மாவட்ட எஸ்.பியாக நியமனம்

* சென்னை தெற்கு போக்குவரத்து காவல் ஆணையர் சக்திவேல் வண்ணாரப்பேட்டை துணை ஆணையராக நியமனம்

*  சென்னை மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையர் மீனா மயிலாடுதுறை மாவட்ட எஸ்.பியாக நியமனம்

*  மயிலாடுதுறை எஸ்.பியாக இருந்த நிஷா சென்னை மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையராக நியமனம்

* ஆவடி மாநகர தலைமை நிர்வாக துணை ஆணையராக இருந்த உமையாள் கோயம்பேடு துணை ஆணையராக நியமனம்.

*  மதுரை மாநகர வடக்கு துணை ஆணையராக இருந்த அரவிந்த் சிவகங்கை எஸ்.பி.யாக நியமனம்.

*  சென்னை சிஐடி சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு எஸ்.பி. இருந்த சக்தி கணேசன் சென்னை டிஜிபி அலுவலகத்தில் உயர்நீதிமன்ற வழக்குகளை மேற்பார்வையிடும் பிரிவு எஸ்.பி.யாக நியமனம்.

*  சென்னை வண்ணாரப்பேட்டை காவல் துணை ஆணையராக இருந்த  அல்லட்டிபள்ளி பவன் குமார் ரெட்டி தாம்பரம் ஆணையரக சட்டம் ஒழுங்கு துணை ஆணையராக நியமனம்.

*  உயர் நீதிமன்ற பாதுகாப்பு பிரிவு துணை ஆணையராக இருந்த எம். ராஜராஜன் சேலம் நகரம் (தெற்கு) காவல் துணை ஆணையராக நியமனம்.

*  சென்னை போலீஸ் பயிற்சிக் கல்லூரி முதல்வர் எஸ். சந்திரமெளலி சேலம் நகர தலைமையக துணை ஆணையராக நியமனம்.

*  சென்னை கோயம்பேடு துணை ஆணையராக பி. குமார் சென்னை வடக்கு மண்டல போக்குவரத்து காவல் துணை ஆணையராக நியமனம்.


தமிழ்நாட்டில் நேற்று முன்தினம் 27 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்ட நிலையில் நேற்று 33 ஐபிஎஸ் அதிகாரிகள்  பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

போலீஸ் கையைப் பிடித்து கடித்துக் குதறிய தவெக தொண்டர்.. வைரலாகும் விஜய் ரசிகரின் வெறித்தனம்!
அரசு பள்ளி மாணவர்களுக்கு தரமற்ற இலவச சைக்கிள்.. அண்ணாமலையின் பகீர் குற்றச்சாட்டு!