செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில் 31 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து மாணவர்கள் தனிமைபடுத்தப்பட்டு மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில் 31 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து மாணவர்கள் தனிமைபடுத்தப்பட்டு மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் முழு உடல் பரிசோதனை மையம், புனரமைக்கப்பட்ட அறுவை சிகிச்சை அரங்கம் மற்றும் மாணவர் நூலகத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், பொதுமக்களுக்கு தேவையான மருத்துவ நடவடிக்கைகளை செய்வதற்கு பல்வேறு திட்டங்கள் மேற்கொண்டு வருகிறோம். முழு உடல் பரிசோதனை குறைந்த கட்டணத்தில் 1000 ரூபாய்க்கு துவங்கப்பட்டுள்ளது.
undefined
தைராய்டு எலும்பு பரிசோதனை உட்பட சோதனைகள் கோல்ட் சில்வர் பிளாட்டினம் என்ற திட்டத்தில் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே ராஜிவ் காந்தி மற்றும் ஓமந்தூரர் பகுதியில் நடைபெற்று வருகிறது என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், இந்த பகுதியில் துவங்குவதால் வட சென்னையில் உழைக்கும் மக்களுக்கு வசதியாக இருக்கும். இதுவே தனியார் மருத்துவமனையில் 7000 ரூபாய். ஆனால் ஸ்டான்லி மருத்துவமனையில் 1000 ரூபாய் வசதிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்த திட்டம் நல்ல வரவேற்பு பெற்றால் மற்ற மருத்துவமனைகளில் இருக்கும் பபரிசோதனை மையங்களில் இதே கட்டணம் வசூலிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.
மேலும் செங்கல்பட்டு விஐடி கல்லூரியில் 21 ஆம் தேதி 6 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனுடன் தற்பொழுது 25 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் விஐடியில் 31 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை அடுத்து மாணவர்கள் தனிமைபடுத்தப்பட்டு மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளனர். மேலும் தோற்று பாதிக்கப்பட்டவர்களில் 80 சதவீதம் பேர் வெளி மாநிலத்தவரும் உள்ளனர். கேளம்பாக்கத்தில் உள்ள விஐடி கல்லூரியில் 410 மாணவ மாணவிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.