தியாகிகளின் வங்கி கணக்கில் ரொக்கப்பரிசு.! அசத்தலான அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர்

Published : Jan 27, 2025, 09:10 AM IST
தியாகிகளின் வங்கி கணக்கில் ரொக்கப்பரிசு.! அசத்தலான அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர்

சுருக்கம்

குடியரசு தின விழாவை தியாகிகளுக்கு ரூ.3,000 ரொக்கம் வழங்குவதாக அறிவித்துள்ளார். புதுச்சேரியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில், தியாகிகளுக்கு மரியாதை செலுத்தப்பட்டது 

குடியரசு தின கொண்டாட்டம்

குடியரசு தினம் நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. அந்த வகையில் தலைநகர் டெல்லியில் குடியரசு தலைவர் தேசிய கொடியை ஏற்றி வைத்து முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். இதே போல ஒவ்வொரு மாநிலத்திலும் ஆளுநர் கொடியேற்றி வைத்தனர். அந்த வகையில் சென்னையில் நடைபெற்ற விழாவில் ஆளுநர் ரவி கொடியேற்றி வைத்து தமிழக அரசின் சாதனை விளக்க அலங்கார ஊர்திகளை பார்வையிட்டார்.  மேலும் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது. 

ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராட்டம்

இந்த நிலையல் ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டில் இருந்த இந்தியாவை மீட்க தியாகிகள் சுதந்திர போராட்டம் தான் முக்கிய காரணமாக அமைந்தது. இந்த போராட்டத்தில் பல லட்சம் பேர் பங்கேற்ற நிலையில் சிறையில் அடைக்கப்பட்டு சித்தரவதைக்கு ஆளாக்கப்பட்டு ஆயிரக்கணக்கானோர் உயிரையும் இழந்துள்ளனர்.

சுதந்திர போராட்ட தியாகிகளின் போராட்டத்தை கவுரவிக்கும் வகையில் மத்திய மற்றும் மாநில அரசு சார்பாக பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகிறது. அந்த வகையில் சுதந்திர தின கொண்டாட்டம், குடியரசு தின விழாக்களின் போது மரியாதை அளித்து மாதாந்திர உதவித்தொகையானது அதிகரித்து வழங்கப்படுகிறது. இந்த நிலையில் குடியரசு தினத்தையொட்டி தியாகிகளுக்கு வங்கி கணக்கில் ரொக்கப்பணம் செலுத்தப்படும் என புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். 

தியாகிகள் கவுரவிப்பு 

புதுச்சேரியில்  குடியரசு தின விழாவை முன்னிட்டு தியாகிகளை கவுரவிக்கும் விழா மற்றும் தேநீர் விருந்து நிகழ்ச்சி  நடைபெற்றது. இந்த விழாவில் முதலமைச்சர் ரங்கசாமி கலந்து கொண்டு தியாகிகளை கவுரவித்தார். இதனையடுத்து விழாவில் பேசிய முதலமைச்சர், புதுச்சேரி கல்வி, மருத்துவம், உள்கட்டமைப்பு ஆகியவற்றில் மேம்பட்டுள்ளது எனவும், உள் கட்டமைப்பை மேம்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறினார்.   நாட்டின் விடுதலைக்கு போராடி தமது இன்னுயிர் நீத்தவர்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில் உரிய மரியாதை செலுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

 குடியரசு தினத்தை முன்னிட்டு புதுச்சேரி மாநிலத்தில்  தியாகிகளுக்கு ஆண்டுதோறும் பரிசு வழங்கி வருவதாகவும், அந்த வகையில் தியாகிகளுக்கு பரிசு வழங்குவதற்கு பதிலாக அவர்களது  வங்கி கணக்கில் தலா ரூ.3 ஆயிரம் ரொக்கம் அவரவர் வங்கிக்கணக்கில் ஓரிரு நாளில் செலுத்தப்படும் என  முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார். 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

காரில் திமுக கொடியுடன்.. ஃபுல் மப்பில் போயி யாரையாவது சாக அடிக்கவா? இப்படி பேசிட்டு கேஸ் போடாத போலீஸ்
எடப்பாடி பழனிசாமிக்கு மொத்த அதிகாரத்தையும் தூக்கி கொடுத்த பொதுக்குழு உறுப்பினர்கள்.. இபிஎஸ் எடுப்பது தான் முடிவு..!