தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரியில் 30 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சற்று அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களாக கொரோன பரவல் விகிதம் சென்னை, சேலம், நாமக்கல், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 1359 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த மாதத்தில் 50 க்கும் கீழ் பதிவாகி வந்த பாதிப்பு, தற்போது 1000 ஐ தாண்டியுள்ளது.
இந்நிலையில் கோடைவிடுமுறை பிறகு ஜூன் 13 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டு நடைபெற்று வருகிறது. அதே போல் அனைத்து வித கல்லூரிகளும் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இதனிடையே கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்படுவது பெற்றோர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க: மிரட்டும் கொரோனா.. இன்று ஒரே நாளில் 15,940 பேருக்கு தொற்று.. இன்றைய பாதிப்பு நிலவரம்..
அதன் படி தற்போது துத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் உள்ள 30 மாணவர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 200 மாணவ, மாணவிகளுக்கு கொரோனா பரிசோதனை நடத்தியதில், 30 மாணவர்களுக்கு தொற்று இருப்பது உறுதி செய்யபட்டுள்ளது. இதையடுத்து, கொரோனா உறுதியான 30 மாணவர்களும் விடுதியில் தனிமைப்படுத்தபட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில், தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்பு நடத்தப்படுவதாக கல்லூரி நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க: தமிழகத்தில் இன்று 1000-ஐ கடந்தது கொரோனா… 621 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்!!