கோவையில் 90 அடி கிணற்றில் தலைக்குப்புற விழுந்த கார்...! நீரில் மூழ்கி 3 இளைஞர்கள் துடிதுடித்து பலி

By Ajmal KhanFirst Published Sep 9, 2022, 10:15 AM IST
Highlights

அதிவேகமாக சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து கோவை தொண்டாமுத்தூர் அருகே உள்ள 90 அடி கிணற்றில் விழுந்தது. இந்த விபத்தில்  காரில் பயணித்த ஒருவர் தப்பிய நிலையில் 3 இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

அதிவேகமாக வந்த கார்

கோவை வடவள்ளி பகுதியை சேர்ந்த, ரோஷன்,ஆதர்ஷ், ரவி இவர்கள் தனியார் கல்லூரியில் படித்து வருகின்றனர். நேற்று இரவு தொண்டாமுத்தூர் சாலையில் உள்ள மதுபான விடுதிக்கு விருந்துக்கு சென்றுள்ளனர். அதிகாலை நேரத்தில் விருந்து முடிவடைந்த நிலையில் ரோஷன் மற்றும் அவரது நண்பர்கள் காரில் வீடு திரும்பி கொண்டுள்ளனர். அப்போது தென்னமனூர் மாரியம்மன் கோயில் அருகே அதிவேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்தது. அந்த பகுதியில் இருந்த பழனிசாமி என்பவருக்கு சொந்தமான விவசாய கிணற்றில் கார் பாய்ந்து விழுந்துள்ளது. 

கிடுக்கிப்பிடி போட்ட நீதிமன்றம்...! எதிர்த்து நின்ற சவுக்கு சங்கர்... ஒரு வாரத்திற்கு வழக்கு ஒத்திவைப்பு

90 அடி கிணற்றுக்குள் பாய்ந்தது

விவசாய கிணற்றுக்கு பாதுகாப்பிற்காக இரும்பு கேட் அமைக்கப்பட்டிருந்துள்ளது. அந்த கேட்டையும் உடைத்துக்கொண்டு கார் சுமார் 90 அடியுள்ள கிணற்றில் விழுந்துள்ளது. அப்போது காரை ஓட்டி வந்த ரோஷன் மட்டும் அதிர்ஷவசமாக தப்பியுள்ளார். மற்ற 3 பேருடன் கிணற்றுக்குள் கார் விழுந்துள்ளது. இதனையடுத்து அருகில் உள்ளவர்கள் காரை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். 90 அடி உள்ள கிணற்றில் 40 அடிக்கு மேல் தண்ணீர் உள்ளதால் 3 பேரை உடனடியாக மீட்க முடியாமல் தொய்வு ஏற்பட்டது.

இதனையடுத்து தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் கயிறு மூலம் காரை கட்டி வெளியே எடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.  கிணற்றுக்குள் விழுந்த காரில் இருந்த 3 இளைஞர்களும் உயிரிழந்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படியுங்கள்

ராமநாதபுர மாவட்டத்தில் இரண்டு மாதங்களுக்கு 144 தடை உத்தரவு..! காரணம் என்ன தெரியுமா..?

click me!