இமானுவேல் சேகரன் நினைவுநாள் மற்றும் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜை நடைபெற இருப்பதையொட்டி இரண்டு மாதங்களுக்கு ராமநாதபுரம் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
144 தடை உத்தரவு
ராமநாதபுர மாவட்டத்தில் இமானுவேல் சேகரன் நினைவுநாள் மற்றும் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜை நிகழ்வுகளில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமானவர்கள் வருவார்கள். இதன் காரணமாக அந்த பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவும், கடந்த ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு பரமக்குடியில் மிகப்பெரிய வன்முறை ஏற்பட்டது. அப்போது ஏராளமானோர் உயிரிழந்தனர். காவல்துறை அதிகாரி சுபனும் கொல்லப்பட்டார். இதனை கருத்தில் கொண்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆண்டு தோறும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படும்
அந்தவகையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் 144 தடை உத்தரவானது, வரும் அக்டோபர் மாதம் 31ஆம் தேதி வரை சுமார் இரண்டு மாதங்களுக்கு அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் செப்டம்பர் 11ஆம் தேதி அன்று நடைபெற இருக்கும் இமானுவேல் சேகரன் நினைவு நாளையொட்டியும், அக்டோபர் 28, 29, 30 ஆகிய தேதிகளில் நடைபெற இருக்கும் முத்துராமலிங்க தேவர் குருபூஜை விழாவை யொட்டியும் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளை கருத்தில் கொண்டு இந்த ஊரடங்கு உத்தரவானது அமல்படுத்தப்பட்டுள்ளது.
இன்று சென்னையில் எந்தெந்த பகுதிகளில் மின்தடை தெரியுமா? 5 மணி நேரம் வரை கரண்ட் இருக்காது..!
வெளி மாவட்ட வாகனங்களுக்கு அனுமதி மறுப்பு
இந்த தடை உத்தரவால் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வெளி மாவட்டத்தில் இருந்து வாடகை வாகனங்கள் அனுமதி இல்லாமல் வரக்கூடாது. அதேபோல ஜாதி ரீதியான சமுதாய தலைவர்கள் பேனர்கள், பிளக்ஸ் பேனர்கள் வைக்க கூடாது. ஜாதி, மத பாடல்கள் ஒளிபரப்ப கூடாது. 4 பேருக்கு மேலாக பொதுவான இடங்களில் கூடக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பரமக்குடியில் செப்., 11ல் இமானுவேல் சேகரன் நினைவு நாள், அக்., 30ல் கமுதி அருகே பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் குருபூஜை விழா நடக்கிறது.எஸ்.பி., தங்கதுரை அறிக்கையின் அடிப்படையில் செப்., 9 முதல் 25 வரையும், அக்., 25 முதல் 31 வரையும் சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படுகிறது. தடை காலத்தில் வெளி மாவட்ட வாடகை வாகனங்களுக்கு ராமநாதபுரத்திற்குள் நுழைய அனுமதி கிடையாது. மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற்ற சொந்த வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படியுங்கள்