திருச்சியில் 3 வயது குழந்தை கடத்தல்: 24 மணி நேரத்தில் மீட்டு அசத்திய காவல் துறை

By Dinesh TG  |  First Published Oct 1, 2022, 2:04 PM IST

திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியில் சாலையோரம் விளையாடிக் கொண்டிருந்த 3 வயது சிறுவன் கடத்தப்பட்டதாக புகார் தெரிவிக்கப்பட்ட 24 மணி நேரத்தில் சிறுவனை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த காவல் துறைக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.


திருச்சி ஸ்ரீரங்கம் மீன் மார்க்கெட் அருகே சாலையோரம் வசித்து வருபவர் முருகன். இவரது மகனான ராகவன் என்ற 3 வயது சிறுவன் நேற்று கடத்தப்பட்டான். இது தொடர்பாக ஸ்ரீரங்கம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி மேற்கொண்டனர். இந்நிலையில் 24 மணி நேரத்தில் சமயபுரம் பகுதியில் அக்குழந்தை தனியாக நின்று கொண்டிருப்பதை காவல் துறையினர் கண்டுபிடித்தனர். 

டாஸ்மாக் கடைகளுக்கு 5 நாட்கள் விடுமுறை - குடிமகன்கள் வருத்தம்

Tap to resize

Latest Videos

undefined

இதனைத் தொடர்ந்து ராகவனை மீட்ட காவல் துறையினர் பெற்றோரிடம் ஒப்படைத்தனர். சிறுவனை கடத்திச் சென்ற பெண்ணின் உருவம் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. கடத்தலில் ஈடுபட்ட பெண்ணை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

விளம்பரம் வேண்டுமானால் படங்களில் நடிக்கலாம்: உணவு பாதுகாப்பு அதிகாரிக்கு டோஸ்

கடத்திச் சென்ற பெண் தன்னை காவல் துறையினர் நெருங்கி விட்டதால் சமயபுரத்தில் இக்குழந்தையை விட்டு விட்டு சென்றாரா இல்லை? வேறு ஏதும் தகவல் கிடைத்து காவல்துறையிடம் சிக்கி விடுவோம் என தப்பித்து சென்றாரா? எதற்காக ஸ்ரீரங்கத்தில் இருந்து இந்த குழந்தையை கடத்தி சமயபுரத்தில் கொண்டு விட்டு சென்றார். இது போல் இவர் மற்ற குழந்தைகளை கடத்தி விற்றுள்ளாரா என்று பல்வேறு கேள்விகளுக்கு காவல்துறையினர் விடைதேடி வருகின்றனர்.

click me!