மீண்டும் அச்சுறுத்தும் புதிய வகை கொரோனா... கர்நாடாகவில் 3 பேர் பலி- தமிழகத்தில் 4 பேருக்கு பாதிப்பு உறுதி

By Ajmal KhanFirst Published Dec 26, 2023, 9:55 AM IST
Highlights

இந்தியாவில் ஜேஎன்.1 என்ற புதிய வகை கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், கர்நாடாகவில் 3 பேர் இந்த வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளன்ர. தமிழகத்திலும் 4 பேருக்கு புதிய வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

 மீண்டும் அச்சுறுத்தும் கொரோனா

கொரோனா பாதிப்பு காரணமாக உலகமே இரண்டு ஆண்டுகள் அவதிப்பட்டனர். லட்சக்கணக்கோனார் உயிரிழந்தனர். இந்த பாதிப்பில் இருந்து தற்போது தான் மீண்டு இயல்பு நிலை திரும்பி வருகிறது. இந்தநிலையில் மக்களை மீண்டும் அச்சப்பட வைக்கும் வகையில்,  இந்தியாவில் ஜேஎன்.1 என்ற புதிய வகை கொரோனா வைரஸ் தற்போது வேகமாக பரவி வருகிறது. ஜே.என்.1 என்ற உருமாறிய புதியவகை கொரோனா, கேரளாவில் முதல்முறையாக கண்டறியப்பட்டது. அதைத்தொடர்ந்து, இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இந்தியாவில் 63 பேருக்கு புதியவகை கொரோனா தாக்கியது கண்டறியப்பட்டுள்ளது.

Latest Videos

முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ன.?

இந்த புதியவகை கொரனாவால் பெரிய அளவு பாதிப்பு இல்லையென்றாலும், ஒரு சில மாநிலங்களில் உயிர் பலியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த புதியவகை கொரானாவில்  காய்ச்சல், சலி, உடல்வலி போன்ற அறிகுறிகள் இருக்கும் எனவும், கொரோனாவின் போது அளிக்கப்பட்ட அதே முறையில் சிகிச்சை அளிக்கப்படும் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் கொரோனா பாதிப்பு காலத்தில் முக கவசம், மக்கள் கை கழுவதல், முகக்கவசம் அணிதல், கூட்டமான இடங்களுக்கு செல்வதை தவிர்த்தல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கை கடைபிடிக்க வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்துப்படுகிறது.

கர்நாடாகவில் 3 பேர் பலி

இதனிடையே கோவா மாநிலத்தில் மட்டும் 34 பேரிடம் புதியவகை கொரோனா கண்டறியப்பட்டது. மராட்டிய மாநிலத்தில் 9 பேருக்கும், கேரளாவில் 6 பேருக்க தமிழ்நாட்டில் 4 பேருக்கும், தெலுங்கானா மாநிலத்தில் 2 பேருக்கும் புதியவகை கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அண்டை மாநிலமான கர்நாடகாவில் புதிய வகை கொரோனா பாதிப்பு வேகமெடுத்து வருகிறது. அம்மாநிலத்தில் 34 பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். பெங்களூருவில் மட்டும் 20 பேருக்கு புதிய வகை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்

இந்தியாவில் 63 பேருக்கு JN.1 வகை கொரோனா பாதிப்பு உறுதி.. மத்திய அரசு தகவல்

click me!