திருப்பூரில் தனியார் ஆதரவற்ற காப்பகத்தில் உணவு அருந்திய சிறுவர்களுக்கு வாந்தி, மயக்கம்.. 3 பேர் பலி..

By Thanalakshmi VFirst Published Oct 6, 2022, 1:58 PM IST
Highlights

திருப்பூர் அடுத்த திருமுருகன்பூண்டியில் செயல்பட்டு வரும் தனியார் காப்பகத்தில் உணவு அருந்திய 3 சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் 11 பேருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
 

திருப்பூர் அடுத்த திருமுருகன்பூண்டியில் செயல்பட்டு வரும் தனியார் காப்பகத்தில் உணவு அருந்திய 3 சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் 11 பேருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 திருமுருகன்பூண்டியில் செயல்பட்டு வரும் தனியார் ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தில் 15 சிறுவர்கள் உள்ளனர். இந்நிலையில் ஆயுதபூஜை விடுமுறை என்பதால் ஒரே ஒரு சிறுவன் மட்டும் சொந்த ஊருக்கு சென்று விட, மீதி 14 பேரும் அங்கே தங்கியுள்ளனர்.

மேலும் படிக்க:குன்றத்தூரில் தந்தை, மகன் ஒரே கயிற்றில் தூக்கிட்டு தற்கொலை

இதனிடையே சிறுவர்கள் அனைவருக்கும் நேற்றிரவு உணவாக சோறு, ரசம் மற்றும் லட்டு வழங்கப்பட்டுள்ளது. இதனை சாப்பிட்ட பின்னர் சிறுவர்களுக்கு வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று காலை சிற்றுண்டி சாப்பிட்ட சிறுவர்களுக்கு மீண்டும் மயக்கம் ஏற்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து காப்பகத்தில் இருந்த சிறுவர்கள் அனைவரும் அவினாசி மற்றும் திருப்பூர் அரசு மருத்துமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில் மாதேஷ், பாபு உள்ளிட்ட 3 சிறுவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலே பரிதாபமாக உயிரிழந்தனர். 

மேலும் படிக்க:தமிழர்களின் அடையாளம் இறை வழிபாடு; சைவமும், வைணவமும் இந்து மதத்தின் அடையாளம்;- தமிழிசை சவுந்திரராஜன்

மேலும் திருப்பூர் மருத்துவமனையில் 9 சிறுவர்களும் அவினாசியில் 3 சிறுவர்களும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுக்குறித்து வழக்கு பதிந்து திருமுருகன்பூண்டி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தனியார் காப்பகத்தில் உணவு அருந்திய 3 சிறுவர்கள் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

click me!