
திண்டுக்கல்
அடிப்படை வசதிகள் கேட்டு பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் 9 பெண்கள் உள்பட 27 பேரை காவலாளர்கள் கைது செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை பேரூராட்சிக்கு உள்பட்ட 2-வது வார்டில் மக்களுக்குத் தேவையான சாலை வசதி, தடுப்புச் சுவர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கோரிக்கை விடுத்துனர்.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி, வடமதுரை பேரூராட்சி அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டு மார்க்சிஸ்ட் கட்சியயினர் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்திற்கு வடமதுரை கிளைச் செயலர் பெருமாள் தலைமைத் தாங்கினார்.
இந்தப் போராட்டத்தில், “நன்னி ஆசாரியூர் பகுதியில் பல ஆண்டுகளாக சேதமடைந்த சாலையை சீரமைத்துத் தர வேண்டும்.
தொட்டகௌண்டனூர் பகுதியில் சாலைக்கும் கழிவு நீர் ஓடைக்கும் இடையே தடுப்புச் சுவர் கட்ட வேண்டும்” போன்ற கோரிக்கைகளை வலியுறத்தி முழக்கமிட்டனர்.
அப்போது அங்கு பாதுகாப்பிற்கு நின்றிருந்த காவலாளர்கள் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக் 9 பெண்கள் உள்பட 27 பேரை கைது செய்தனர்.