
வேப்பங்குப்பம் காவல்துறையினர் "விசாரணை" நடத்தியதில் ஆந்திராவிற்கு செம்மரம் வெட்டச் சென்றதாக 25 பேரை திங்கள்கிழமை கைது செய்தனர்.
வேலூர் மாவட்டம், வேப்பங்குப்பம் காவல் ஆய்வாளர் அப்பாசமி தலைமையிலான காவலாளர்கள் திங்கள்கிழமை மாலை வாகனத் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அவ்வழியாக வந்த 3 ஆட்டோக்களை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.
ஆட்டோவில் மலைக் கிராமங்களான தேந்தூர், பாலாம்பட்டு, கத்தியாப்பட்டு, ஜார்தான்கொல்லை உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 25 பேர் பயணம் செய்துள்ளனர்.
அவர்கள் உணவு பொட்டலங்கள், தண்ணீர் பாக்கெட்டுகள் போன்றவற்றை வைத்திருந்தனர். சந்தேகத்தின் பேரில் காவல்துறையினர் அவர்களிடம் “விசாரணை” நடத்தினர். அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறியுள்ளதாக தெரிகிறது.
மேலும், தீவிர விசாரணையில் அவர்கள் ஆந்திர மாநிலத்திற்கு செம்மரம் வெட்டச் செல்வதைக் கண்டுபிடித்துள்ளனர்.
இதையடுத்து அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.