வர்தா புயல்.... 24 பேர் உயிரிழப்பு - அமைச்சர் உதயகுமார் தகவல்

 
Published : Dec 19, 2016, 01:28 PM ISTUpdated : Sep 19, 2018, 02:49 AM IST
வர்தா புயல்.... 24 பேர் உயிரிழப்பு - அமைச்சர் உதயகுமார் தகவல்

சுருக்கம்

வர்தா புயலால் 24 பேர் உயிரிழந்துள்ளனர், பெருமளவு மரங்களும் விழுந்துள்ளன என அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார். 

 வர்தா புயல் முன்னெச்செரிக்கை நடவடிக்கையால் உயிர்சேதங்கள் பெருமளவு தவிர்க்கப்பட்டுள்ளன எனவும் அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

வர்தா புயலின் போது பேரிடர் மேலாண்மை அமைப்பு மேற்கொண்ட துரித நடவடிக்கை மக்களின் பாராட்டுதலை பெற்றுள்ளது. 'வர்தா' புயல் வீசியதால், மூன்று மாவட்டங்களில், 28 ஆயிரம் ஹெக்டேர் பயிர்கள் சேதம் அடைந்துள்ளன. அமைச்சர் தகவல்.

'வர்தா' புயல் வீசிய போது, மூன்று மாவட்டங்களில், 24 பேர் உயிர் இழந்தனர். பாதிக்கப்பட்ட மக்களுக்காக, 300 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டன. அதில், 104 முகாம்களில் மக்கள் தங்க வைக்கப்பட்டு, தேவையான உதவிகள் செய்யப்பட்டன. 

புயலினால், 28 ஆயிரம் ஹெக்டேர் பயிர்கள் சேதம் அடைந்துள்ளன. 5,500 ஹெக்டேர் தோட்ட பயிர்கள் சேதம் அடைந்துள்ளன. 529 மாடுகள், 299 ஆடுகள், 33 ஆயிரம் கோழிகள் இறந்துள்ளன. 70 ஆயிரம் குடிசைகள் சேதம் அடைந்துள்ளன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு பேரிடர் நிவாரண நிதியில் இருந்து உதவிகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. என அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

அந்த முட்டாளுக்கு தான் சொல்லுறேன் திமுக ஆட்சிக்கு வந்து செஞ்ச முதல் ஊழல் இதுதான் - ஹெச்.ராஜா பேட்டி
அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிக்க 10 பேர் கொண்ட குழு! பழனிசாமியின் பக்கா பிளான்!