குஷ்பூ,லக்ஷ்மி ராமகிருஷ்ணன் பஞ்சாயத்தை தடை செய்...!!! - கொந்தளிக்கும் பாஜக

Asianet News Tamil  
Published : Dec 19, 2016, 01:21 PM ISTUpdated : Sep 19, 2018, 02:49 AM IST
குஷ்பூ,லக்ஷ்மி ராமகிருஷ்ணன் பஞ்சாயத்தை தடை செய்...!!! - கொந்தளிக்கும் பாஜக

சுருக்கம்

குடும்பப் பிரச்சனைகளை பொது வெளியில் விவாதிப்பது என்பது முகம் சுளிக்க வைக்கக்கூடியது. நான்கு சுவற்றுக்குள்ளேயே பேசித் தீர்க்கவேண்டிய பிரச்சனையை பொது ஊடகங்களில் கொண்டு வருவதும், விவாதிப்பதும் தற்போது சில தொலைக்காட்சிகளில் இடம் பெற்று வருகின்றன,

சொல்வதெல்லாம் உண்மை, நிஜங்கள் போன்ற நிகழ்ச்சிகள் பரபரப்பாக பேசப்பட்டாலும், சற்றும் நாகரீகம் இல்லாமல் இருக்கும் இந்நிகழ்ச்சிகள் பொது வெளியில் பல்வேறு விமர்சனங்களையும், எதிர்ப்பையும் பெற்றுள்ளன.

இந்நிலையில் மயிலாடுதுறை பகுதியைச் சேர்ந்த பா.ஜ.க.வினர் இந்நிகழ்ச்சிகளுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அப்பகுதியில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

குடும்பப் பஞ்சாயத்தை பொது மேடையில் பல லட்சக்கணக்கான மக்களின் பார்வையில் படும்படி நடத்தப்படும் இந்நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் இந்நிகழ்ச்சிகளை நடத்தும் நடிகைகளுக்கு பா.ஜ.க.வினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்,

PREV
click me!

Recommended Stories

அதிமுக.. திமுக புரிஞ்சுக்கோங்க மரியாதை மற்றும் சீட்டுகளை யார் தருகிறார்களோ அவர்களோடு தான் கூட்டணி
3வது வரிசையில் தள்ளப்பட்ட ராகுல் காந்தி... கொதித்தெழுந்த காங்கிரஸ்.. இதுதான் ஜனநாயகமா?