
சென்னை மெரினா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கூட்டமைப்பு சார்பில் 16 அமைப்புக்கள் சேப்பாக்கத்தில் போராட்டத்தில் ஈடுபட உள்ளன.
எனவே போராட்டக்காரர்கள் மெரினாவில் நுழைந்துவிடக் கூடாது என்பதால், அங்கும், சேப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். காந்தி சிலை முதல் உழைப்பாளர் சிலை வரை மெரினாவிற்கு செல்வபவர்களை போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
மெரினா உட்புற சாலையில் வாகனங்கள் நிறுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. போலீசார் முன் எச்சரிக்கையாக சாலையில் கடந்த கற்களையும் அகற்றினர். போராட்டகார்களுடன் மோதலை தவிர்க்க போலீசாருக்கு உயர்அதிகாரிகள் அறிவுரை வழங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
சேப்பாக்கம் விருந்தினர்மாளிகை முதல் எழிலகம் வரை தடுப்புக்களை அமைத்து போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். முன்னெச்சரிக்கையாக சாலையோரமாக கிடந்த கற்களையும் போலீசார் அகற்றினர். போராட்டக்காரர்களுடன் மோதலை தவிர்க்க போலீசாருக்கு உயரதிகாரிகள் அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.