மழை, வெள்ளம்… பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ 200 பொறுப்பு அலுவலர்கள் நியமனம்!!

By Narendran SFirst Published Nov 8, 2021, 4:47 PM IST
Highlights

சென்னை மாநகராட்சியின் 200  வார்டுகளிலும் மழையால் பாதிக்கப்பபட்ட பொதுமக்களுக்கு தேவையான உணவினை வழங்க 200 பேர் பொறுப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். 

சென்னை மாநகராட்சியின் 200  வார்டுகளிலும் மழையால் பாதிக்கப்பபட்ட பொதுமக்களுக்கு தேவையான உணவினை வழங்க 200 பேர் பொறுப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் கடந்த 6 ஆம் தேதி இரவு தொடங்கிய மழை விடிய விடிய பெய்ததை அடுத்து நகரின் சாலைகளில் வெள்ள நீர் தேங்கியது. மேலும் பல பகுதிகளில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. மேலும் சுரங்கப்பாதைகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளதால் சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளன. இந்த மழைநீரை வெளியேற்ற மாநகராட்சியின் சார்பில் போர்கால அடிப்படையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மக்களின் பாதுகாப்பு கருதி மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் மழைநீர் தேங்கி  உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் உணவு இன்றி தவித்து வரும் நிலையில் சென்னையில் சென்னையில் மழையால் பாதிக்கப்பபட்ட பொதுமக்களுக்கு தேவையான உணவினை வழங்க 200 பொறுப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்னர். இந்த பணிகளில் மாநகராட்சி சார்பில் அனைத்து நிலைகளிலும் பணியில் உள்ள அலுவலர்கள், பணியாளர்கள் என மொத்தம் 23,000 பேர் பணியில் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னையில் மழைநீர் தேங்கி உள்ள இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்து பொதுமக்களுக்கு நிவாரன உதவிகளை வழங்கினார்.

அதை தொடர்ந்து பெருநகர சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களுக்கும் மழை வெள்ள பாதிப்புகளை கண்காணிக்க நியமிக்கப்பட்டுள்ள இந்திய ஆட்சிப்பணி அளவிலான அலுவலர்களுடன் மாநகராட்சி ரிப்பன் கட்டிட வளாகத்தில் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனையின் போது தமிழ்நாடு முதலமைச்சர்,  மழைநீர் தேங்கி உள்ள இடங்களில் உடனடியாக நீரை வெளியேற்றவும்,  மழையால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு தேவையான உணவு மற்றும் நிவாரன உதவிகளை  வழங்கவும் உத்தரவிட்டுள்ளார். இதனிடையே தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பாக மீட்டு தங்கவைப்பதற்காக 169 நிவாரன மையங்கள் தயார் நிலையில் உள்ளன.  நிவாரன மையங்களில் தங்கவைக்கும் பொதுமக்களுக்கு உணவு வழங்குவதற்கான அனைத்து வசதிகளுடன் கூடிய  சமையலறைகள் 15 இடங்களில் தயார் நிலையில் உள்ளன. இந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி மழைநீர் தேங்கிய தாழ்வான பகுதிகளில் வசிக்கும் 889 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டு  நிவாரன முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நிவாரன முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு மூன்று வேளையும் உணவு  வழங்கப்பட்டு வருகிறது.

நிவாரன முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்கள் மற்றும் மழைநீர் தேங்கி பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் என இதுவரை 2,02,350 பேருக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சியின் 200  வார்டுகளிலும் மழையால் பாதிக்கப்பபட்ட பொதுமக்களுக்கு தேவையான உணவினை வழங்க வருவாய்த் துறையின் சார்பில்  வரி வசூலிப்பவர் அல்லது உரிம ஆய்வாளர் 200 பேர் பொறுப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டு தொடர்ந்து கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு வேளையும் சுமார் 1,50,000 நபர்களுக்கு வழங்ககூடிய அளவிற்கு உணவு சமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மண்டல கண்காணிப்பு அலுவலர்கள் மற்றும் மண்டல அலுவலர்கள் தங்கள் பகுதிகளில் தனியார் தொண்டு நிறுவனங்கள் மற்றும் தன்னார்வலர்களை ஒருங்கிணைத்து  மழையால் பாதிக்கப்பபட்ட பொதுமக்களுக்கு தேவையான நிவாரன உதவிகளை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளவும் அறிவுறுக்கப்பட்டுள்ளனர்.

click me!