சென்னையை புரட்டி எடுத்த கனமழை.. ஆன்லைன் உணவு டெலிவரி பாதிப்பு.. ஏமாற்றத்தில் பிரியாணி பிரியர்கள்..!

By vinoth kumarFirst Published Nov 8, 2021, 3:27 PM IST
Highlights

வடகிழக்கு பருவமழை வெளுத்து வாங்கி வந்த நிலையில் நேற்று முன்தினம் முதல் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மழை கொட்டி தீர்த்தது.

சென்னையில் கனமழை காரணமாக சாலைகளில் இருசக்கர வாகனங்கள் செல்ல முடியாதபடி தண்ணீர் தேங்கியதால், பிரதான நிறுவனங்களான சுமோட்டோ, ஸ்விகி போன்றவை வாடிக்கையாளர்களின் ஆர்டர்களை எடுக்கவில்லை. 

வடகிழக்கு பருவமழை வெளுத்து வாங்கி வந்த நிலையில் நேற்று முன்தினம் முதல் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மழை கொட்டி தீர்த்தது. குறிப்பாக சென்னையில் ஒரே நாள் இரவில் சுமார் 25 செ.மீ. மழை பதிவானது. இதனால், சென்னை வெள்ளக்காடானது. குறிப்பாக வியாசர்பாடி, பெரம்பூர், புரசைவாக்கம், தண்டையார்பேட்டை, வண்ணாரப்பேட்டை, அம்பத்தூர், கொளத்தூர், வில்லிவாக்கம், வேளச்சேரி, மடிப்பாக்கம் ஆகிய பகுதிகளில் வீடு மற்றும்  தெருக்களில் அதிகளவில் தண்ணீர் தேங்கிள்ளது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டது. 

இதையும் படிங்க;- எம்எல்ஏ வீட்டுக்கே இந்த கதியா? வேளச்சேரி பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்ட அசன் மவுலானா..!

இந்நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதாலும், தொடர் மழை காரணமாகவும் பலர் வெளியில் செல்ல முடியாமல் வீடுகளில் முடங்கினர். இவர்களில் பலர் ஆன்லைனில் உணவு வகைகளை ஆர்டர் செய்தனர். ஆனால், உட்புற சாலைகளில் இருசக்கர வாகனங்கள் செல்ல முடியாதபடி தண்ணீர் தேங்கியதால், பிரதான நிறுவனங்களான சுமோட்டோ, ஸ்விகி போன்றவை வாடிக்கையாளர்களின் ஆர்டர்களை எடுக்கவில்லை. சிலர் ஆர்டர் செய்த உணவுகள் அவர்கள் குறிப்பிட்டுள்ள முகவரியில் டெலிவரி செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. 

இதையும் படிங்க;- வெட்கமா இல்ல.. என் புருஷனுக்கு நீ ஏண்டி இப்படி அலையறே? வீட்டுக்கு வந்த தோழியால் ரோட்டுக்கு வந்த குடும்பம்.!

இதையும் படிங்க;- ஒரே நாளில் 2015ஐ நினைவுப்படுத்திய மழை.. 6 ஆண்டுகளுக்குப் பிறகு அடிச்சு தூக்கும் மழை.. பீதியில் சென்னை மக்கள்.!

இதனால், உணவு டெலிவரி ஊழியர்கள் தங்களது உணவு பை மற்றும் வாகனங்களுடன் சாலையில் சிரமப்பட்டதை காண முடிந்தது. வேறுவழியின்றி பொதுமக்கள் வீட்டிலிருந்த உணவை சாப்பிட வேண்டிய நிலை ஏற்பட்டது. ஞாயிற்றுக்கிழமையில் பலர் பிரியாணி ஆர்டர் செய்து சாப்பிடும் வழக்கம் கொண்டுள்ளனர். அவ்வாறு நேற்று ஆர்டர் செய்த பலருக்கு அரை மணி நேரம் கழித்து ஆர்டர் கேன்சலானது குறிப்பிடத்தக்கது.

click me!