
மாபெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ள ரஜினிகாந்த நடித்து வெளிவரவுள்ள 2.0 படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை(27.10.17)நாளை துபாயில் நடைபெற உள்ளது
இதற்காக நடிகர் ரஜினிகாந்த்,இயக்குநர் சங்கர், நடிகை எமிசாக்சன், யே.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட பல நடிகர் நடிகைகள் துபாய் சென்றடைந்தனர்
இதற்கு முன்னதாக 2.௦ பட நட்சத்திரங்கள் துபாயில் செய்தியாளர்களை சந்தித்தனர்.
சந்திப்புக்கு முன்னதாக சங்கர், நடிகர் ரஜினிகாந்த் , நடிகை எமிசாக்சன் உள்ளிட்டோர் சோபாவில் சும்மா ஹாயாக அமர்ந்த வண்ணம் பேசி மகிந்தனர்...
2.0 இசை வெளியீட்டு விழா மிகவும் பிரமாண்டமாக நடைபெற உள்ளதால், துபாய் தமிழ் மக்கள் அதிக ஆர்வமாக படம் பற்றி விமர்சனம் செய்தும், துபாயில் நடைபெறும் நிகழ்வு என்பதால் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பல கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
மொத்தத்தில் விழா கோலாகளமாக நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது