
சென்னை பட்டினப்பாக்கத்தில் இன்று காலை ராக்கி என்ற இளைஞர், டவர் மேல் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தார்.
அதிக மதிப்பெண் பெற்றிருந்தும் நீட் தேர்வால் மருத்துவப் படிப்பில் சேரமுடியாமல் போனதால் தன் உயிரை மாய்த்துக்கொண்ட அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டு, டவரின் மேல் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தார் ராக்கி.
நீண்ட நேர போராட்டத்திற்குப் பிறகு தீயணைப்புத்துறையினர், ராக்கியை மீட்டனர்.
மீட்கப்பட்ட பிறகு, தற்கொலை மிரட்டல் விடுத்ததற்கான காரணம் இளைஞரிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் அளித்த விளக்கத்தைக் கேட்டு தீயணைப்புத்துறையினர் அதிர்ந்துபோயினர்.
நீட் தேர்வு விவகாரத்தால் தற்கொலை செய்துகொண்ட அனிதாவிற்காக நீ என்ன செய்தாய்? என ராக்கியின் காதலி அவரிடம் கேட்டுள்ளார். காதலி கேட்ட கேள்வி, ராக்கியின் மனதில் ஆதங்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
எனவே அனிதாவின் மரணத்திற்கு நீதிகேட்டு தம்மால் முடிந்த எதையாவது செய்ய வேண்டும் என்பதற்காக டவர் மீது தற்கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிவித்துள்ளார்.