மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் டெங்கு: 2 வயது குழந்தை, கர்ப்பிணி பெண் உயிரிழப்பு!

 
Published : Oct 26, 2017, 12:46 PM ISTUpdated : Sep 19, 2018, 01:21 AM IST
மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் டெங்கு: 2 வயது குழந்தை, கர்ப்பிணி பெண் உயிரிழப்பு!

சுருக்கம்

2 year old child pregnant female death

திருவண்ணாமலை மற்றும் மதுரையில் டெங்கு பாதிப்பு காரணமாக கர்ப்பிணி பெண் மற்றும் 2 வயது குழந்தை ஒருவர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் டெங்கு பாதிப்பு வெகு வேகமாக பரவி வருகிறது. இதனை தடுப்பதற்கு அரசு அனைத்து முயற்சிகளும் எடுத்து வருகின்றன. ஆனாலும், டெங்கு பாதிப்பு வெகு வேகமாக பரவி வருகிறது. 

டெங்குவால் ஏற்படும் மரணங்கள் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றன. 

டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஆயிரத்துக்கும் மேலாக உள்ளது. டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்கள் 40-க்கும் மேற்பட்டோர் என அரசு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி டவுன் சைதாப்பேட்டையைச் சேர்ந்த அனிஷ்குமார் என்பவரின் 2 வயது மகன் ஹரிவர்சாந்த் டெங்கு பாதிப்பால் உயிரிழந்தார்.

ஹரிவ்ர்சாந்த், கடந்த 8 நாட்களுக்க முன்பாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மதுரையில், ராணி என்ற 5 மாத கர்ப்பிணி பெண் ஒருவர் டெங்கு காய்ச்சலுக்கு உயிரிழந்தார். கடந்த 4 நாட்களாக காய்ச்சல் இருந்த நிலையில், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில்  சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

PREV
click me!

Recommended Stories

சொன்னதை செய்து காட்டிய ஸ்டாலின்.! திமுக தொண்டர்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்!
ஓரங்கட்டப்பட்ட ஓடி ஓடி வேலை செய்த அஜிதா அஃனஸ்..! தவெகவில் தடுத்து நிறுத்தப்பட்ட பெண் நிர்வாகி