
கந்து வட்டியில் சிக்கிய பிரபல நடிகை...! எச்சரிக்கை விடுத்ததால் பரபரப்பு....!
தாமரை உள்ளிட்ட பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருபவர் நடிகை அனிதா. இவர் தற்போது சென்னை போரூரில் வசித்து வருகிறார்.
நடிகை அனிதா அவருடைய தேவைக்காக 5 லட்சம் ரூபாயை அவரது உறவினரிடமிருந்து பெற்று உள்ளார்.இதற்கு வட்டியாக 1.80 லட்சம் பணத்தை கொடுத்துவிட்டதாகவும்,அதனுடன் காசோலையில் கையெழுத்து போட்டு கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த கையெழுத்தை பயன்படுத்தி 30 லட்சம் மதிப்புள்ள வீட்டை எழுதிதருமாறு மிரட்டுவதாக தெரிவித்துள்ளார்
இது தொடர்பாக முன்னதாகவே வேலூர் மாவட்டம் ராணி பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.ஆனால் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது
இதனை தொடர்ந்து சென்னை போலிஸ் கமிஷனர் அலுவலகத்திற்கும் , முதலமைச்சர் தனி பிரிவிற்கும் புகார் மனு அனுப்பி உள்ளதாக ஆனந்தி தெரிவித்துள்ளார்
கந்துவட்டி மூலம் மனதளவில் பாதிக்கப்பட்ட ஒரு குடும்பமே நெல்லையில் தீக்குளித்து இறந்த பின்னர்,பெரும்பாலான மக்கள் கந்துவட்டி தொடர்பாக புகார் கொடுக்க முன் வந்துள்ளனர்.
அதே வேளையில் அவசரத்திற்கு பணம் கொடுத்த நல்ல உள்ளங்கள் கூட கந்துவட்டி என்ற பெயரில் பாதிக்கக்கூடும் என்பது நிதர்சனமான உண்மை....